தமிழறிஞர் த.சரவணத்தமிழன்!

Standard

தமிழறிஞர் த.சரவணத்தமிழன். இவரை தமிழகம் முழுவதும் உள்ள தமிழசிரியர்கள் பலரும் அறிந்திருப்பார்கள்.  யாரிடமும் தூயத் தமிழில் தான் உரையாடுவார். காலத்திற்கு ஏற்ற தமிழ் இலக்கண நூல்களான தமிழ்நூல், யாப்பு நூல் உள்ளிட்ட பத்துக்கு மேற்ப்பட்ட தரமான நூல்களை எழுதியவர். திரு.வி.க பற்றாளர். சுயசிந்தனையாளர். திருவாரூரில் திரு.வி.க.வுக்கு சிலை வைக்க காரணமாக இருந்தவர். திருவாரூரில் படைப்பாளிகள் பலரை உருவாக்கியவர். பலருக்கு உதவியாய் வாழ்ந்தவர். தமிழாசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றுவிட்டார்.

இப்போது, விதவையான மூத்த மகளுக்கு துணையாக சென்னை தாம்பரம் அருகில் உள்ள கரிசங்கால் கிராமத்தில் பக்கவாதம் பாதித்த நிலையில் வாழ்ந்து வருகிறார்.

படைப்பாளிகளின் படைப்பில் உள்ள குறைகளை நேரடியாக சுட்டிக்காட்டும் இயல்புக்கொண்டவர். பெரிய சபைகளில் மாற்றுக்கருத்தை தைரியமாக சொல்லுவார். பெரிய மனிதர்களிடம் வளைந்து நெளிந்து போகத் தெரியததால், முக்கியத்துவம் பெற வேண்டிய பல நிலைகளில் தவிர்க்கப்பட்டார். அதற்காக கவலையும் கொள்ளாதவர். அவரது இயல்புக்கு ஒரு சம்பவம்…

.அவரது தமிழ் மீது பற்றுக்கொண்ட திருவாரூர் இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். ஐயாவின் பொருளியல் சிரமம் அறிந்து ஆண்டுதோறும் ஐயாயிரம் ரூபாய் உதவுவதாக என்னிடம் தொலைபேசியில் தெரியப்படுத்தினார். நானும் அவர் பெயருக்கே டிராப்டாக அனுப்புங்கள் கொடுத்துவிடுகிறேன். என்றேன். டிராப்டை அஞ்சலில் அனுப்பி வைத்தார். மகிழ்வோடு எடுத்துக்கொண்டு கரிசங்கால் சென்று சந்தித்து விபரம் சொல்லி கொடுத்தேன். தயக்கமாக வாங்கிப்பார்த்தார். அவரை யாரென தெரியாதே என்றார். உங்களுக்கு தெரியும் மறந்துவிடீர்கள் என்றேன். உங்க செல்பேசியில் அவரோடு இப்ப பேச முடியுமா? என்றார். தொடர்புகொண்டேன். அந்த நபரிடம்  நீங்க எனக்கு பணம் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? என்றார். அன்பின் அடையாளம். உங்கள் தமிழ் மீது பற்று என்றார். என்னிடம் பள்ளியிலோ, படைப்பிலக்கிய பட்டறையிலோ பயிலாத நீங்கள் எனக்கு உதவ முன்வந்ததை என் மனம் ஏற்கவில்லை. பணத்தைத் திருப்பி அனுப்பி விடுகிறேன். என்றார். அவரோ ஐயா திருப்பி அனுப்பி விடாதீர்கள். கடனாக வைத்துக்கொள்கிறேன். தங்களை நேரில் சந்திக்கும் போது பெற்றுக்கொள்கிறேன். என்ற அந்த நபர். என்னிடம் கூறினார் ‘த. ச. ஐயா வடிவில்  திரு.வி.க.வைக் காண்கிறேன். என்று…

த.சரவணத்தமிழன் மனைவி பெயர் சுசிலா தமிழச்சி. சில ஆண்டுகளுக்கு முன்பு இதய நோய்யால் இறந்துப்போனார். இத்தம்பதியினருக்கு இல்லற வாழ்வில் மொத்தம் பிறந்தது எட்டு குழந்தைகள். நான்கு குழந்தைகளே பிழைத்தனர்.

மூத்த மகன் பெயர் குறழேந்தி. இவருக்கு ஐந்து மகள்கள். தற்போது காந்தாவனம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். தமிழறிஞரின் மூன்று மகள்களில் இரண்டு மகள்கள் விதவையாக வாழ்கின்றனர்.

மூத்தமகள் தமிழரசியின் கணவர் ராமையன். சென்னையில் குளிர்சாதன பெட்டி பழுது நீக்குபவராக தொழில் செய்து வாழ்ந்தவர், சரியான நேரத்துக்கு உண்ணாமல் அல்சர் வந்து திருமணமான ஏழு ஆண்டில் இறந்துப்போனார்.

அதன் பிறகு மகளுக்கு துணையாக சென்னைப் பக்கம் தன் பணியை மாற்றிக்கொண்டார். மாற்றலாகி செல்லும் இடங்களிலும் அவரது இயல்பு மாறாது. அங்குள்ள மக்களிடமும், மாணவர்களிடமும் தனித்தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்துவதை தனது முதற்க்கடமையாக செய்து வருவார்.

அடுத்த சில ஆண்டுகளில் அவரது இரண்டாவது மகள் மெய்யறிவின் கணவர் இறந்துப்போனார். இருச்சக்கர பழுது நீக்குபவராக தொழில் செய்து வந்தவர், தன்னிடம் இருந்த நுரையீரல் பிரச்சினைக்கு சரியாக  சிகிச்சை எடுக்காததால்
அவரும் மறைந்தார்.

அப்போது அவர் தன் மாப்பிள்ளையின் நினைவில்  எழுதிய இரங்கல் கவிதை அண்மையில் வேறொரு படைப்பை தேடுவதற்காக எனது பழைய சேகரிப்பை கிளரிய போது கையில்  சிக்கியது.

முன்பு வாசித்த கவிதை தான். திரும்பவும் வாசித்தேன். செம்மொழி மாநாடு நேரத்தில் அந்த தகுதி வாய்ந்த தமிழறிஞரை நினைத்துக்கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

அந்தக்கவிதை…

திரு.சவகர் எனும் அமைதி மாப்பிள்ளை (இரங்கல்)
காலம்: 20-5-2003
களம்: புதுக்கோட்டை

கண்ணியமிக்க காந்தாவனத்துக்

கன்னியர் சிலபேர் புதுக்கோட்டை புகுந்தனர்

இரத்தினம், அம்சவல்லி, இந்திராணி

பத்மாவதி மெய்யறிவு பாங்கொடு வாழ்ந்தனர்

எனினும் அந்த ஐவருள் மூவர்

கணவரை இழந்தும் கருத்தாய் இருந்து

குழந்தையைக் காத்தனர். பெரிய பாட்டன்

ஆனந்தராமன் குடும்பப் பெண்கள்

ஞானம், தையல்நாயகி, இருவரும்

பூண்டி புகுந்து கணவர் இறந்தும்

ஆறு வேலி நிலத்தைக் கொண்டு

பேரர் கண்டனர், சின்னப்பாட்டன்

வீராசாமி குடும்பப் பெண்கள்

இருவர் பெற்ற பிள்ளைகளுக்குத்

தமிழரசி, மெய்யறிவு இருவரைக் கொடுத்தோம்,

குடும்பச்சுமையைக் கூடத்தாங்கி

இரவும் பகலும் இருமடங்கு பணியால்

இராமையன் இறந்தார்,இக்கால் சவகர்

நல்ல கல்வியும் நல்ல வேலையும்

இல்லையே என்னும் ஏக்கம் இருப்பினும்

தஞ்சையில் கீழவாசல் வந்தோர்

மீளச் செல்ல மிதிவண்டி மிதித்தது

பல்லாயிரம் முறை இருக்கும், ஏறிச்

சென்றோர்க்கு எல்லாம் நன்றியும் இருக்கும்

சென்னை, புதுகையில் இருசக்கர வண்டி

ஓழுங்கு தொழிலைத் தொடர்ந்து பண்ணியவர்

இல்லப் பணிசெய்தார், இல்லாமல் போனார்.

தங்க மகளின் கலங்கிய மனமும்

குழந்தைகள் இருவரின் வாடிய முகமும்

மலர்ந்து சிரித்திடும் நாள் வர வேண்டும்.

ஏசினும் வாழ்த்தினும் ஏதும் செய்யாத

இயற்கை என்னும் இறைவன் அன்றி

உறவும் நட்பும் உதவ வேண்டும்.

-த.சரவணத்தமிழன்

இந்த பதிவை எழுதிய சில நாட்கள் கழித்து, சென்னை, தாம்பரம் அருகில் இருக்கும் கரிசங்கால் கிராமத்தில் வசிக்கும் தமிழறிஞரை சென்று சந்தித்தேன். அப்போது எடுத்த வீடியோதான் இது…

.

About yaanan(யாணன்)

சொந்த ஊர் என எதையும் சொல்வதில்லை. உண்மையில் சொந்தம் என்று எதுவும் யாருக்கும் நிரந்தரமாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் சில காலம் சில, சொந்தமானவைப் போல் தொடருகின்றன. பிரபஞ்சத்தின் உயிர்ப்பை நான் மரங்களில் தான் பார்க்கிறேன். என்னைத் தூண்டும் சக்தியாக மரங்கள் இருக்கின்றன. இதுவரை நூற்றுக்கு மேலான மரக்கன்றுகளை நட்டு இருக்கிறேன். மரணத்திற்கு முன்பாக மேலும் பல நடக்கூடும். நான் எழுதும் ஆத்ம ஞான கருத்துகளே எனது அழமான நம்பிக்கை. அதுபோலவே எனது வாழ்க்கையையும் உணருகிறேன்.

4 responses »

 1. தமிழறிஞர் சரவ்ணத்தமிழனை அறிவேன்.
  தஞ்சையில் சந்த்தித்துள்ளேன்.
  நண்பர் செம்மல் அடிக்கடி அவரைப்பற்றிக் கூறியுள்ளார்.
  இலக்கணப் பெரும் புலவர்.
  அவரால் உருவான எண்ணற்ற எழுத்தாளர்கள் கவிஞர்கள் அவ்ரை நன்றியுடன் பாராட்ட மகிழ்ந்து கேட்டிருக்கிறேன்.
  அன்பிலே
  இறையரசன்

 2. சான்றோர் சரவணத் தமிழனை தமிழக அரசு கௌரவிக்க வேண்டும்.

  அன்புடன்.
  அ.சிவராமன்.
  சவுதி அரேபியா.

 3. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈடு இணையற்ற தமிழ் அறிஞரைத் தமிழ் உலகம் போற்றிக் கொண்டாட தவறி விட்டது மிகவும் வருத்தத்திற்குரியது.

 4. Un moocholi ketkadhu ini..Aanal un pachcholi kettukkonde irukkum.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s