Monthly Archives: October 2010

இருட்டு வாழ்க்கை இல்லாத சாமியார் யார்?

Standard
என்னிடம் நண்பர்கள் யாராவது குருவாக யாரை ஏற்றுக்கொள்வது? எனக் கேட்பதுண்டு. சிலர் நாட்டில் நல்ல சாமியார் யார்..? எனவும் கேட்பதுண்டு. அவர்களுக்கு, நான் வழக்கமாக பதிலளிப்பது… உங்களிடம் எதையும் எதிர்பார்க்காதவரை குருவாக ஏற்றுக்கொள்ளுங்கள். குறிப்பாக பணம் காசு, எதிர்பார்க்காதவரை என்பேன். இன்றையக் காலத்தில் அதிலும் குறிப்பாக துறவைப் போதிக்கும் ஆன்மிகத்தில் அப்படியொரு குரு கிடைப்பது அரிது.
.
குருக்களாக தங்களைச் சொல்லிக்கொள்ளும் சாமியார்கள் பலரும், தங்களை நாடிவரும் சாதாரண மனிதர்களிடம் எதிர்பார்ப்பது பணம், பொன், பொருள், போன்றவைதான். வித்தைகள், மாயாஜாலங்கள், எதிர்காலம் குறித்த அருள்வாக்குகள் பலசொல்லும் ஆற்றல் படைத்த இத்தகைய குருக்கள் கடைசியில் பக்தனிடம் கையேந்துவது பணமமோ, பொருளாகவோதான் இருக்கிறது. இவையெல்லாம் தனக்கல்ல. மக்களுக்கு என்பார்கள். மருத்துவமனை, பள்ளிக்கூடம், கோயில் கட்டுகிறேன்,என்பார்கள்.
.
முதுமை, மரணம் போன்றவற்றை விஞ்ஞானம் கொண்டும் வெல்ல முடியாததாலும், மரணம் தழுவும் ரகசியம் அறிய முடியாததாலும்,உடலில் பலம் குறைகிறபோது மனிதனின் ஆழ்மனதில் விடைதெரியாத அச்சம் உட்காருகிறது. அப்போது வாழ்நாளில் மனசாட்சியை மீறி செய்துவிட்ட தவறுகள் பயமுறுத்த, பரிகாரமாக இப்படியான குருக்களின் பாதையில் நடக்க தொடங்குகின்றனர். இங்குதான் வியாபாரம் சூடுபிடிக்க துவங்குகிறது.
.
எங்கள் வழியைப் பின்பற்றினால் நல்ல மரணம் நிகழும், மறுபிறப்பு இருக்காது, சொர்க்க வாசல் திறக்கும் போன்ற கவர்ச்சிகரமான டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறார்கள்.துறவி என்றும், மகான் என்றும், குருஜி என்றும் உலவும் இவர்களால், அவர்கள் மரணத்தையே தடுக்க முடியாது.முன்னரே அறியவும் இயலாது என்பதுதான் உண்மை. அவர்கள் நம்மைவிட அறியாமை நிறைந்தவர்கள்.
.
மரணம் நெருங்கும்போது இதுபோன்ற பல குருக்கள் பிளட்டெஸ்ட், யூரின் டெஸ்ட் எடுத்து ஒரு மருத்துவர் வழங்கும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு, எமனிடமிருந்து தப்பிக்க முயற்சிப்பார்கள். வாசலுக்கு எமன் வந்துவிட்ட பிறகு ஏன்ப்பா லேட்டா வந்திருக்கே.. உனக்காக பல நாள காத்திருக்கேன் என சொல்லும் துணிவுயற்றவர்களாக இருப்பார்கள்.
.
தலாய் லாமா உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான திபெத்தியர்களின் தலைவர், ஆன்மிக குரு. அவர் தன்னிடம் பல மாயாஜால சக்திகள் இருப்பதாக கூறி தன் மக்களை வசப்படுத்தவில்லை. ஆனால் மக்கள் அவரை அப்படி எண்ணினார்கள். அவர் ஒரு நேர்காணலில் மகிழ்வோடு சொன்னார். மக்கள் என்னிடம் மிகப்பெரிய ஹிலீங் சக்தி இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால் சில வருடங்களுக்கு்முன் என் வயிற்றில் ஒரு அறுவைசிகிச்சை நடந்தது. அதுமுதல் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது, எனக்கு எந்த ஸ்பெஷல் ஹிலீங் பவரும் இல்லை என்பது.’’ என நேர்மையோடு பதிலளித்தார், தலாய் லாமா.
.
இந்தியாவில் மூன்று கோடி பக்தர்களைக் கொண்ட சாய்பாபா தன் விரல்களிலிருந்து இருந்து விபூதி, மோதிரம் எடுத்துதான் இன்றும் தன் விலையுயர்ந்த பக்தர்களை தன் வசப்படுத்த அவரால் முடிகிறது.
.
நான் வர்ணிக்கிற குருக்கள் எல்லாம் நிறுவனமாக இயங்குபவர்களைத்தான் குறிப்பிடுகிறேன். உண்மையான ஞானி எப்படி இருப்பார் என்பது குறித்து ஏற்கனவே எழுதிய பதிவை வாசிக்கவும்.
இன்று விஞ்ஞானம் வளர்ந்து விட்டதால், அதிநவீன கேமராக்கள் இருப்பதால் மிக அரிதாக சிலரது இருட்டு வாழ்க்கை வெளியாகிறது. வெளியாக பலருக்கும் இருட்டு வாழ்க்கை இருக்கலாம். இன்னும் வெளியாகவில்லை எனில் அந்த ஆன்மிகக் கம்பெனியில் உள்குத்து ஏற்பட்டு அங்கே யாரும் இன்னும் கேமரா வைக்கவில்லை என்று பொருள்.
.
இந்தியாவிலேயே புகழில், பொருளில் உச்சத்தில் இருக்கும் சாயிபாபாவின் ஓரினச்சேர்க்கை பண்பு, குறித்து சில ஆண்டுகளுக்கு முன் பி.பி.சி எடுத்த ஆவணப்படத்தொகுப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.காண்க.