Monthly Archives: May 2012

பெண்கள் அணியும் துப்பட்டா கழுத்தை மறைக்கவா?

Standard
சென்னை நகரில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் தென்படுகிறார்கள். பணி, படிப்பு நிமித்தமாக சாலைகள் முழுக்க பெண்கள் நின்றபடி, நடந்தபடி, வாகனங்களில் பயணித்தபடி இருக்கிறார்கள். இது, இரவு வரை கூட நீளுகிறது. இளம்பெண்கள் பெரும்பாலும் அழகாக தெரிகிறார்கள் என்பதைவிட, கவர்ச்சியாக தங்களைத் தெரிவிக்கிறார்கள்.
.
வாலிப நண்பனோடு டூவீலரில் பயணிக்கும் பெரும்பாலான இளம்பெண்களின் பயணம் இப்படியாகத்தான் இருக்கிறது…  ‘பின்னால் அமர்ந்திருக்கும் இளம்பெண் தனது மார்ப்பை வாகனம் ஓட்டும் ஆணின் முதுகில் நெருக்கி அழுத்தாமல் பயணிப்பதில்லை.’ அவ்வாறு பயணிக்கும் பெண்களில் பலர் இறுக்கமான ஜீன்ஸ், டிசார்ட் அணிகிறார்கள். ஆணை இறுக்கி அனைக்கும் அப்பெண்ணின் ஜீன்ஸ் கீழ் இறங்கி, அவளது பிட்டத்தை அப்படியே நிர்வாணப்படுத்துகிறது. பின்னால் வண்டி ஓட்டும் வாகனக்காரர்களில் சிலர் சங்கப்படுகிறார்கள். பலர் டிராபிக் டென்ஷனில் ‘ இது சின்ன ரிலாக்ஸ்’ என கருதுகிறார்கள்.

amutha ias

amutha ias

பழையகாலம் மாதிரி பாவடை தாவணி வேண்டாம். புடவையும் பணிச் சூழலுக்கு வசதியான உடையல்ல. சுடிதார், சல்வார் கமீசு சரியான உடைதான். ஜீன்ஸ், பேண்ட், சட்டை, டீசார்ட் தாராளமாக அணியட்டும். இதெல்லாம் பெண்களுக்கு வசதியானதே. நவீன உடைகளை வரவேற்போம். ஆனால் அவ்வுடைகளை அழகாக அணியலாமே. கவர்ச்சியாக அணிய வேண்டிய அவசியமென்ன? நோக்கமென்ன? அதுதான் விளங்கவில்லை.
.
முன்பு திரைப்படங்களில் கூட கதாநாயகியாக தோன்றுபவர் அழகாக மட்டுமே காட்சியளிப்பார். கவர்ச்சியாக காட்சியளிக்க தனிப் பாத்திரத்தை உருவாக்குவார்கள். இப்போது கதாநாயகியே கீழிறங்க வேண்டியதாகிவிட்டது. அதுபோல சமூகமும் மாறிவிட்டதா? கவர்ச்சி என்பது ஆபாசத்தின் தொடக்கம். அதன் அளவு எந்த கணம் வேண்டுமானாலும் மாறுபடும். ஆபாச உணர்வால் உந்தப்படும் ஆண்கள் தனது எண்ண உணர்வுகளால் அக்காட்சியை எச்சில் படுத்துகிறான். அண்மையில் அறிவியல் ஆய்வு ஓன்று ஐம்பது வயதுக்கு மேலான ஆண்களுக்கு சாலையில் காணப்படும் இத்தகைய காட்சிகளால் மனதில் ஏக்க அழுத்தம் ஏற்பட்டு ஒருவித கேன்சருக்கு வழிவகுக்கிறது எனக் கூறுகிறது. பாவ புண்ணியக்கணக்குகள் படி யோசித்தால் இத்தகைய கவர்ச்சிப் பெண்கள், மன அழுத்தத்திற்கு ஆண்களை ஆளாக்குவதன் மூலம் பாவத்தைச் சிறிதளவேனும் சம்பாதிக்கிறார்கள் என்றே கூறலாம்.

துப்பட்டாவை வைத்து கழுத்தை மறைக்கிறார்கள்

துணிக்கடை பொம்மை

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வயதுக்கு வந்த மகளின் உடையை, அவளது தாய் மிக கவனமுடன் கண்காணிப்பாள். மார்பு எடுப்பாக தெரியும்படி உடை உடுத்த அனுமதிக்கமாட்டாள். மாராப்பு விலகினால் எட்டியிருந்தே ஜாடை செய்வாள்.
.
அதற்கு விளக்கம் ஒரு கிராமத்து தாயிடம் இருந்து கேட்டிருக்கிறேன். அத்தாய் சொன்னாள்.   ‘ ‘பலரது கண்பட்டால் பின்னாளில் குழந்தைக்கு தாய்பால் குறைந்துபோகுமின்னு வழிவழியா ஒரு நம்பிக்கை ”என்றாள்.
.
இன்றைய காலத்தில் மாராப்பு என்பதற்கு மரியாதையே இல்லை. சுடிதார், சல்வார் அணிகிறார்கள், மாராப்பு துணியாக பயன்படுத்த வேண்டிய துப்பட்டாவை வைத்து கழுத்தை மறைக்கிறார்கள். மார்பை எடுப்பாக காட்டுகிறார்கள். கழுத்து என்ன மார்பைவிட கவர்ச்சி நிறைந்ததா? புரியவில்லை. மிகச் சிலரே துப்பட்டாவை சரியாக அணிகிறார்கள். அதில் ஒருவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா.
 
இப்பொழுது பெண்கள் வயது வித்தியாசமில்லாமல் லெக்கின்ஸ் எனும் ஒருவகை இறுக்கமான உடை உடுத்துகிறார்கள். உள்ளதை உள்ளபடி இறுக்கிகாட்டும் உடையாக அது அமைந்துள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆபாச இரவு நடனம் ஆடுவோர், கரகாட்டம், குறத்தியாட்டம் என்ற பராம்பரிய கலையைத் தவறான முறையில் ஆபாச நடனமாக மாற்றியாடும் பெண்கள் இத்தகைய லெக்கின்ஸை அணிந்திருந்தனர். அந்த உடை இப்போது நவீனப் பெண்களின் உடையாகி வருகிறது. இதனால் அத்தகைய நடனம் ஆடுவோர் அந்த லெக்கின்ஸூம் அணியாமல் தற்போது, ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது போல…

லெக்கின்ஸ் உடை

உடை விஷயம் இப்படி என்றால்… வட இந்திய நவீனப்பெண்கள் வேறு மாதிரி சபதம் செய்கிறார்கள். பூனம் பாண்டே என்றொரு நடிகையாம், கிரிக்கெட்டில் அவள் விரும்பிய அணி ஜெயித்துவிட்டதாம் உடனே நிர்வாண போஸ் தருகிறாள். இன்னொரு நடிகை மேலாடையை மட்டும் அவுக்கிறேன் என்கிறாள். ஆக போட்டி போட்டு ஆடை அவிழ்க்கும் நிகழ்வுகள் வடநாட்டில் தொடங்கிவிட்டது. ஆக அடுத்த பத்தாண்டுகளில் நவீனப் பெண்கள் பிராவும், கால்சட்டையும் மட்டுமே அணிந்த நிலையில், சென்னை சாலைகளில் உலா வரும் வாய்ப்பு தாராளமாக தெரிகிறது.

.
உடை விஷயத்தில் பெண்களை குறித்து எழுதும் அதேவேளையில் ஆண்கள் குறித்து எழுத வேண்டியுள்ளது. அது மிகக்குறிப்பாக ஆலயங்களில் இளம் ஆண் குருக்கள்கள் மேலாடை இன்றி இருப்பது. அதுவும் ஒருவித கவர்ச்சியே. குடுமியில் இருந்து மெல்ல கிராப்புக்கு மாறி வருபவர்கள், உடை விஷயத்திலும் மாற்றம் கொண்டு வரவேண்டும். ஜிப்பா போன்று ஒரு மேலாடை அணிதல் நன்று. அதேபோல் கேரளா, தமிழகம், இலங்கையில் உள்ள சில ஹிந்து ஆலயங்களில் வழிபாட்டுக்குச் செல்லும் ஆண்களைச் சட்டையைக் கழற்ற சொல்கிறார்கள். இதுவும் தவிர்கப்பட வேண்டிய ஓன்றாகும். நான் அத்தகைய ஆலயங்களில் உள்ளே செல்வதை பெரும்பாலும் விரும்புவதில்லை. தவிர்த்துவிடுகிறேன்.

அடியார்க்குநல்லான் நினைவும், அம்பிகா ஹெவென் மணமும்!

Standard

writer aadiyarkunallan

நான் திருவாரூரில் வசிக்கிற காலத்தில் தான் எனக்கு அம்பிகா ஹெவென் ஊதுபத்திகள் அறிமுகமானது. அதை அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் அடியார்க்குநல்லான். அவரது எழுத்து மட்டுமல்ல. அவரே ஒரு இரசனை மிகுந்த மனிதர். உரையாடலின்போது அந்த கதாபாத்திரமாக மாறிப்போவார். அவரோடு உரையாடிவிட்டு நகரும் யாருக்கும் அவரது பேச்சுப்பாணி ஒரு பத்து நிமிடமாவது தொற்றிக்கொள்ளும். அல்லது பாதித்துவிடும். எத்தனை பெரிய சித்தாந்தத்தையும் பிரித்து மேய்யும் ஆற்றல். கேட்பவர்கள் பிரமித்துப்போவார்கள். அந்த ஊரில் ரசிகர்கள் பலர் அவருக்கு இருந்தார்கள். அவர் எழுதிய சுவாதி சிறுகதை, படித்து முடிக்கும் போது மொத்தமும் ஸ்தம்பிக்கும்.

 மதுவும், புகையும் அவருக்கு உற்ற தோழர்கள். திருவாரூரில் அவர் அமரக்கூடிய இடங்கள் சில இருந்தன. மிதிவண்டியில்தான் பயணிப்பார். மஸ்லீன் துணியில் வெள்ளைச் சட்டை, கதர் வேட்டி. நிதானமாக சிரிப்பார்.

எளிதில் யாரையும் நையாண்டி செய்து பேசுவார். பல நேரங்களில், பேச்சின் ஏதாவது ஒரு இடத்தில் அவரது தாத்தா, அப்பா காலத்து செல்வ வாழ்க்கை எதிரொலிக்கும். கூடவே நொடித்து விட்ட ஏக்கமும் தென்படும். அவரிடம் புரிந்துகொள்ள முடியாத இயல்புகள் பல உண்டு. நாலு பேரோடு நின்று பேசிக்கொண்டிருக்கும் போது சட்டென ஒரு இடைவெளியில் பிரிந்து செல்வார். ‘போயிட்டு வரேன். நாளைச் சந்திக்கலாம்’ போன்ற சம்பிரதாய வார்த்தைகளை அவரிடம் எதிர்பார்க்க இயலாது. பிறப்பால் பிராமணர் அல்ல. எனினும் பிராமணரைவிட சமஸ்கிருத புலமை அவருக்கு உண்டு.  ஆங்கிலம் பிரமாதமாக பேசுவார், எழுதுவார். ஜோதிடம், மாந்தீரீகம் அறிந்தவர். குறிப்பாய் காளி வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர்.

நான், தெற்கு மடவிளாகத்தில் குடியிருந்த போது மிக நெருக்கமாக என்னோடு உறவாடியிருக்கிறார். தினமும் மாலை என் வீட்டைத் தொட்டுவிட்டு செல்வார். நான் வீட்டில் இருந்தால் உள்ளே வருவார். பத்து நிமிடம் பேசுவார். அது அன்றைக்கு காய்கறி வாங்கிய அனுபவமாகக் கூட இருக்கும். என் அம்மா தரும் தேநீரை பணிவோடு பருகுவார்.  அப்போது அவருக்கு நாற்பது வயதுக்கு மேல் இருக்கும் என அனுமானிக்கிறேன். நான், அவரைவிட பல வருடங்கள் இளையவன்.

அவரது தந்தையார் இருக்கும் காலத்தில் ஒரு முறை அவரது வீட்டின் உள்ளே அழைத்து சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு திருமணம் ஆகவில்லை. திருமணம் செய்துகொள்வார் எனவும் எதிர்பார்க்கவில்லை. வடக்குவீதி கடைசியில் இருந்தது அவர் வீடு. பின்னர் அதை விற்றுவிட்டார். அடிக்கடி அவரது பேச்சில் ஒரு காட்சியை வர்ணிப்பார். அது பெரும்பாலும் இப்படியாக இருக்கும். ‘பின்இரவு நேரம், வானில் பெளர்ணமி நிலவு பிரகாசிக்க, காற்றில் கஜல் இசை கசிந்து வர, அம்பிகா ஹெவென் பத்தி மணம், அமர்ந்திருக்கும் முற்றம் முழுதும் பரவ… மாடத்தில் விளக்கு எரிய, அம்மா வருவா’ என்பார். அவர் அம்மா என்பது காளியைத்தான். அதைச் சொல்லி முடிக்கையில் அவர் கண்களில் ஒரு மினுமினுப்பு தெரியும்.

aadiyarkunallan-young-age

அவர் வீட்டு வாசலில் நின்றும், முன் தாழ்வாரத்தில் அமர்ந்து உரையாடி இருக்கிறேன். ஓரிரு முறை காபி தந்து உபசரித்து உள்ளார். நிலைப்படிக்கு மேலே அவரது கருப்புவெள்ளை படம் மாட்டப்பட்டிருக்கும். வீட்டின் உள்ளே அமர்ந்து பேசும் சூழலை உருவாக்க மாட்டார். ‘அப்பா இருக்கிறார் என்பார். அப்பாவிற்கு மருந்து வாங்கி வந்தது, உள்ளிட்ட பணிவிடைகள் செய்ததை அடிக்கடி கூறுவார். ஆனால் நண்பர்கள் சிலர்,… அவர் மது அருந்தி விட்டு வந்து அப்பாவோடு சண்டை போடுவார் என்பார்கள். அவரது இயல்பை நாம் சட்டென புரிந்துகொள்ள இயலாது.

ஒருநாள் திடீரென ‘உள்ளே வாங்க’ என்றார்.  உள்ளே சாய்வு நாற்காலியில் அப்பா அமர்ந்திருப்பது தெரிந்து தயங்கினேன். ஆனால் அழைத்தார். வியப்போடும், ஆர்வத்தோடு அவரது வீட்டின் உள்ளே சென்றேன். முற்றம் இருந்தது. பரணியில் மான்கொம்புகள் தெரிந்ததுபோல நினைவு. பெரிய வீடு. அதோ தெரியுது பார் அடுப்பாங்கரை என்பதுபோல் பெரிய வீடு. அவர் வர்ணிக்கும் முற்றத்தில் நின்றேன். அது சின்ன முற்றம்தான். ‘பூஜை அறை எது?’ என்றேன். எதிரே தெரிந்த ஒரு அலமாரியைத் திறந்தார். அது அவருக்கான மாடம். உள்ளே பெரிய கல்கத்தா காளிப் படம். கருத்த உருவமாய், நாக்கு சிவக்க நின்றிருந்தாள். கூடவே ரோஜா மணமும், அம்பிகா ஹெவென் பத்தி மணமும் கலந்து வந்து நாசியை வருடியது. அங்கு பிடித்த அந்த மணம், அந்த பத்தியின் மீது ஒரு அலாதி பற்றை ஏற்படுத்தியது. ஒரு பெட்டியில் பத்து பத்திகள் தான் இருக்கும். அப்போ ஐந்து ரூபாய் என நினைவு. (இப்போ பத்து ரூபாய்)

நான் வீடு மாறினேன். அவரும் வீட்டை விற்றுவிட்டு  கொஞ்சம் தள்ளிச் சென்றார். சந்திப்புகள் குறைந்தன. வருடங்கள் ஓடின. ஒருநாள் அடியார்க்குநல்லானுக்கு திருமணம் ஆகிவிட்டது என்றார்கள். ‘எனக்கு பத்திரிகை கொடுக்கலையே’ என்றேன். ‘‘அட நீங்க வேற நண்பர்கள் யாருக்குமே தெரிவிக்கல. கேள்விப்பட்ட ஓரிருவர் தானா போய் கலந்துகிட்டாங்க” என்றனர். மிகமிக எளிமையாக நடந்து முடிந்துவிட்டதாக கூறினார்கள். அவ்வப்போது நேரில் பார்த்தால்தான், பேச்சு என்றானது.

ஓரிரு வருடங்களுக்கு முன் சென்னையில் இருந்து திருவாரூர் சென்றபோது எதிர்பாராமல் ஒரு கடையில் சந்தித்தார். குடும்பநலம் விசாரித்தார். சட்டென எழுந்துசென்றார். பத்து நிமிடத்துக்கு பின் போன் செய்து பேருந்துநிலையம் அருகில் வரச் சொன்னார். சென்றேன். ‘‘இரண்டு மந்திரங்கள் சொல்றேன் எழுதிக்கிங்க.” என்றார். அன்று, அவரது செயல் புது அனுபவமாக இருந்தது. அருகில் கிடந்த ஒரு துண்டு தாளை எடுத்து, அவர் சொல்லச் சொல்ல எழுதினேன். ‘இதைப் பிள்ளைகளைச் சொல்லச் சொல்லுங்க. படிப்புக்கானது’ என்றார். அது சமஸ்கிருத மந்திரங்கள் எனவே அதை எப்படி உச்சரிக்கணும் என பயிற்சி கொடுத்தார். அந்த செயல்,  என் மீது அவர் வைத்திருந்த அன்பின் அடையாளமாகவே உணர்ந்துகொள்ள முடிந்தது. மந்திரம் பலிக்குமா என்று சோதிக்கவில்லை.

பின்னர் மாதம் ஒருமுறை போன் செய்வார் ‘அடுத்தமாதம் சென்னை வரேன். நேர்ல சந்திக்கிறேன்’ என்பார். அதற்குமேல் பேசமாட்டார். இப்படி சில மாதங்கள் பேசினார். நேரில் சந்திக்கவே இல்லை. கடந்த வருடம், ஒருநாள் திருவாரூரில் இருக்கும் நண்பர் ஜீவி காலை நேரம் போன் செய்தார். ‘‘அடியார்க்குநல்லான் இறந்துட்டாரு என்றார். ‘எப்படி?’ என்றேன். ‘‘புற்றுநோய்” என்றார். ‘எப்ப தெரிஞ்சுது?’ என்றேன்., ‘‘ஒருவாரத்துக்கு முன்னாடிதான். டெஸ்டுல தெரிஞ்ச அடுத்த நிமிஷமே, தனக்கு டைம் முடிஞ்சிடுச்சின்னு சொன்னாரு. வெளியில வந்து எந்த கலக்கமும் இல்லாம எப்போதும்போல சிகெரட்தான் பத்தவச்சாரு.” என்றார்.

அதுதான் அடியார்க்குநல்லான்!

அடியார்க்குநல்லான் எழுதிய சுவாதி சிறுகதை!

ஜெயகாந்தன் பற்றிய ஆவணப்படம், தமிழுக்கு கிடைத்த வரம்!

Standard
எழுத்தாளர் ஜெயகாந்தன்!
நான் அதிகம் வாசித்தது, இவரது எழுத்துக்கள். ஏராளமான வாழ்வியல் அனுபவங்களை அடிபடாமலேயே பெற்றுத்தரும் இவரது எழுத்து. நிமிர்ந்த வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்டது. கூனிக் குருகி நிற்காதது. வாசிப்பவர்களின் உணர்வை பேரானந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் சக்தி பல நேரங்களில் அதற்கு உண்டு.
.
அவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்த நான், அவரை நேரில் ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் எனும் ஆவல் பலநேரங்களில் ஏற்பட்டதுண்டு. எனினும் அப்படியான சிந்தனையின் பின்னாடியே, அவரைப்பற்றிய தனிப்பட்ட பிம்பங்களில் அச்சமூட்டும் வர்ணணைகள் வான்முட்ட சொல்லப்படுவதுண்டு. அவரை நேரில் சந்திக்க செல்லும் நபர்களிடம் கடுமையாக நடந்துகொள்வார், கஞ்சா பழகச்சொல்லுவார். எனப் பல பயமுறுத்தல்கள். அதனால் அவர் வீட்டுக்கு வழி கேட்ட தயக்கம்.
.
பதிநான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் கோவி.மணிசேகரன் வீட்டு திருமண நிகழ்வில் அவர் கலந்துகொள்ள வருகிறார் என்பதை அறிந்து வாயிலில் காத்து நின்றேன். காரில் இருந்து இறங்கி நடந்து வந்த கம்பீரத்தை தர்சித்து மகிழ்ந்தேன். திருமண நிகழ்வில் இருந்து திரும்பிச் செல்லும் வரை அவரையே கண்கொத்தி பாம்பாக பார்த்து நின்றிருக்கிறேன். பெரும் படைப்பாளிகளை, கலைஞர்களை, நல்ல தலைவர்களைக் காண்பதே ஒருவித தரிசனம் என நண்பர்களிடம் நான் பகிர்வதுண்டு. பின்னர் புத்தக கண்காட்சி நிகழ்ச்சியில் அவரது உரை கேட்டு மகிழ்ந்ததுண்டு. எனினும் அவரது சபையில் அமர்ந்து உரையாடி, விவாதித்து பெரும் அனுபவம் இல்லையே என்கிற ஏக்கம் இருந்தது. அது அண்மையில் கவிஞர் திரு. ரவிசுப்பிரமணியன் மூலம் தீர்ந்துவிட்டது.
.
எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றி அவர் இயக்கிய ‘எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக்கலைஞன் – ஜெயகாந்தன்’ என்ற ஆவணப்படத்தை அண்மையில் அவரது இணையதளத்தில் வெளியிட்டிருந்தார். எட்டு பகுதிகளாக யூடிப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். ஜெயகாந்தனோடு உறவாடிய மகிழ்ச்சியை அந்த ஆவணப்படம் தருகிறது.
.
இளையராஜா வாய்ப்புத்தேடி அலைந்த போது, கம்யூனிஸ்ட் தளத்தில் அறிமுகமாயிருந்த ஜெயகாந்தன் மூலம் இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனிடம் வாய்ப்பு பெறலாம் என எழுத்தாளரைச் சந்தித்துள்ளார். “உங்களை நம்பித்தான் வந்துள்ளேன்” என்று கூறியவரிடம்,  ” என்னை நம்பி யார் வரச்சொன்னது, உன்னை நம்பித்தான் வரவேண்டும்” என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டாராம், ஜெயகாந்தன்.
.
இளையராஜாவும், ஜெயகாந்தனும் நெருக்கமான நேசத்தைக் கொண்டவர்கள் என்பதற்கு மற்றொரு சான்றுதான். இந்த ஆவணப்படம். இந்தப்படத்தை தயாரித்து, இசையமைத்தவர், இசைஞானி. நேர்த்தியான ஒளிப்பதிவைச் செய்துள்ளார் செழியன். அதேபோல் ஆர்.ஜி.பி. மனோகரரின் படத்தொகுப்பு.
.
படைப்பனுபவத்தில் நீண்ட அனுபவம் கொண்ட கவிஞர் ரவிசுப்பிரமணியன் எனக்கு நேரடி அறிமுகம் இல்லை என்றாலும்…அவரது சொந்த ஊரான கும்பகோணத்தைச் சேர்ந்த அரசு ஆட்டோஸ் உரிமையாளரும், எனது நண்பருமான செந்தில்குமார், பல வருடங்களுக்கு முன் கவிஞர் குறித்து கூறியிருக்கிறார். அவரது இயக்கத்தில் வந்த ஜெயகாந்தன் பற்றிய ஆவணப்படம், தமிழுக்கு கிடைத்த வரம்.
.
கவிஞர் ரவிசுப்பிரமணியனின் இணையதள முகவரி: http://www.ravisubramaniyan.com
.

தங்கத்தை அலட்சியப்படுத்துங்கள்!

Standard

ங்கம் விலை கிடுகிவென உயர்கிறது. பெண்கள் அஞ்சுகிறார்கள். பெண்குழந்தைகள் வைத்திருப்போர் பதறுகிறார்கள். தங்கம் பெண்களின் அடையாளமா? தங்கம் சுமக்காமல் வாழ இயலாதா? முடியும். ஆனாலும், அதைச் சுற்றியே சுழலுகிறார்கள். ஆபத்து அவர்களை சுற்றுகிறது.

நான்கு பவுன் தாலி செயின் அணிந்திருப்பவரின் கழுத்தை அறுத்தால் மதிப்பு ஒரு லெட்சத்துக்கு மேல்… திருடர்கள் இதை பம்பர் பரிசாக கருதுகிறார்கள். பூட்டை உடைத்து திருட வேண்டியதில்லை. திறந்த கடையில் எடுப்பதுபோல..சின்ன கத்தியைக் காட்டினால் செயின் கைக்கு வந்து விடுகிறது. கூட்ட நெருக்கடியில் வேகமாய் டூவிலர் ஓட்ட தெரிந்தால் போதும். படித்தவன் கூட  செயின் அறுக்கிறான். மாட்டியும் இருக்கிறான்.

பெண்கள் தங்க நகை அணிவதால் தான் தனி அழகு வருகிறதா? அந்தஸ்து வருகிறதா? அது உண்மையில்லை. அது ஒரு மாயை. எந்த உலோகத்தில் ஆபரணம் அணிந்தாலும் பெண்கள் அழகுதான். நகையே அணியாதபோதும், அழகு தனியே மிளிரக்கூடியது.

மேலைநாட்டு நாகரீகங்களால்  ஈர்க்கப்பட்ட இந்திய சமூகம், நாளும் மாறிவருகிறது. குறிப்பாக உடை, உணவு, அலங்காரம் போன்றவை. இந்தியப்பெண்கள் இப்போது இறுக்கமான  ஜீன்ஸ், லெஜீன்ஸ் அணிகிறார்கள். முடிவெட்டிக்கொள்கிறார்கள். அதை ஒரு விடுதலை உணர்வுபோல் கொண்டாடுகிறார்கள். உணவு விஷயத்திலும் அப்படித்தான். ஆனால், தினமும் ஒரு விலை விற்கும், நகை விஷயத்தில் மட்டும் விலகி நிற்கிறார்கள்.

தங்கம் ஒரு முதலீடு என வாதிடுகிறார்கள். அதற்கு தங்க காசுகளாக, கட்டிகளாக சேமியுங்கள். சேதாரம் செய்கூலி இழப்பாவது மிச்சமாகும். எந்த கடையிலும் நகையை வாங்க முடியும். எந்த கடையிலும் நகையை சட்டென விற்று காசாக்க முடிகிறாதா? அப்படியே விற்றாலும் சந்தைவிலைக்கு சாத்தியமாகிறதா? பழைய நகைக்கு புது நகைதானே வாங்க  முடிகிறது! உடனே பணம் வேண்டும் என்றால் அடமானம் வைப்பதுதான் எல்லோருக்கும் பழக்கம். அடமானம் வைத்த நகைகளால், நம் முதலீடுக்கு நாமே வட்டி கட்டும் நிலை. இதுதானே மத்தியதர வர்க்கத்தினரின் பெரும்பாலான வீடுகளில் நிலவும் நிஜம்.

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு பேட்டியில் தான், தங்க ஆபரணங்கள் அணிவதில்லை. கலை ஆபரணங்களையே அணிவதாக கூறியிருந்தார். அதாவது மணிகள், கடல் சிப்பிகள், கண்ணாடிகள் போன்றவற்றைகொண்டு செய்யப்பட்ட, கோர்க்கப்பட்ட ஆபரணங்கள். இத்தகைய ஆபரணங்கள் பல வண்ணங்களில், பல கலைகளில் குறிப்பாக விலை மலிவாக கிடைக்ககூடியது. ஆபத்து அற்றது. திருடர்கள் விரும்பாதது. ஆடையின் நிறத்துக்கு ஒன்று அணியலாம். சமூகத்தில் பலதுறைகளிலும் ஜெயித்த பெண்கள், முன்மாதிரியாக விளங்கும் பெண்கள் தங்க நகை அணியாமல் பேஷன் ஆபரணங்களை விரும்பி அணிந்து சமூகத்தில் பிரபலபடுத்த முன்வர வேண்டும்.

திரைப்படங்களில் மார்டன் கதாநாயகி காட்சிகளுக்கு இத்தகைய பேஷன் ஆபரணங்களை இயக்குநர்கள் அறிமுகப்படுத்த வேண்டும். ‘இதுதான் இப்ப பேஷன்’ என கல்லூரி மாணவிகள் கலை ஆபரணங்களை அணிய வேண்டும்.

தங்க ஆபரண விஷயத்தில் இன்னொரு வேடிக்கை என்னவெனில் ஆண்களிலும் சிலர் கழுத்து நிறைய நகைகளோடு காட்சியளிக்கிறார்கள். குறிப்பாக அரசியல்வாதிகள், ரெளடிகள், சினிமா பிரபலங்கள் போன்றோர். அது ஏன்? புரியவில்லை.

இன்னும் மூன்றாண்டுகளில் கிராம் ஒன்று, ஐயாயிரம் விற்க கூடும், என அனுமானிக்கிறேன். ஒரு பவுன் ஒரு லெட்சம் விற்கும் காலம் கூட விரைவில் வரலாம். அதுபாட்டுக்கு விற்கட்டும். பெண்கள், அதை விரட்டிக்கொண்டே ஏன் ஓட வேண்டும்? தங்க ஆபரணங்களை அலட்சியப்படுத்துங்கள். அது உங்களை திரும்பிப் பார்க்கும் காலமும் வரலாம். அதுவரை பயன்பாட்டை மிகவும் குறையுங்கள். இன்றைய ஏழைப்பெண்களுக்கு அது நல்ல செய்தியாக இருக்கும்.

இசைப்பவர்கள் மொழி அறிவதில்லை!

Standard

ஜாவித் அலி தில்லியில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயது முதலே இசையால் சுண்டி இழுக்கப்பட்டவர்.

சுமார் முப்பது வயதுக்குள்ளாகவே ஹிந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் தன் இனிய குரலால் பரவி வருகிறார்.
 .
பெல்லா ஷிண்டே பூனேவைச் சேர்ந்தவர். இசைக்குடும்பம். பாலிவுட்டின் இளம் குயில். இப்போது மராத்தி, உருது, தமிழ், போன்ற மொழிகளிலும் கால் பதித்து வருகிறார்.
 .
இந்த இருவரும் இணைந்து பாடிய ஓர் இனிய தமிழ்ப் பாடலை கேளுங்கள்.  குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் எனும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது, இப்பாடல்.
 .
அதேபோல் கன்னடத்தைத் தாய்மொழியாக கொண்டவர் விஜய் பிரகாஷ். நான் கடவுளில் ஓம் சிவோகம் போன்று ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த பாடல்கள் பல அவரது குரல் பட்டியலில் உள்ளது. இப்போது நண்பன் திரைப்படத்தில் அஸ்கு லஸ்கு…
 .

.