Monthly Archives: March 2017

என்னைப் பற்றிய அவதூறுகளுக்கு தாய் சொன்ன பதில்! -யாணன்

Standard

 

என்னைப் பற்றிய அவதூறுகளுக்கு தாய் சொன்ன பதில்!
—————————————————————————————-
இப்படியாக அவ்வப்போது என்னைக் குறித்து எழுதப்படுகின்றன. நாளைய தினத்துக்கு உதவுமே என ஒருநாளும் நெல்மணிகளைச் சேர்த்து வைக்காத பறவை வாழ்வுதான் அடியேன் வாழ்க்கை! என் அறநெறியான வாழ்வை அவள் அறிவாள்! என்னைச் சந்தித்தவர்களும் நன்கு அறிவார்கள்!

இதுபோன்றவற்றை வழக்கமாக அலட்சியப்படுத்தும் அடியேன், இம்முறை அவள் சம்பந்தப்பட்டதை அவளிடமே கேட்போம் என முடிவு செய்தேன்.

நடு இரவில்…
ஏன் இப்படிஎழுதப்படுகிறது? இதற்கு என்ன பதில்? கேட்டேன்.
தாய் சொன்ன பதில்… சரியெனப்பட்டது. அதையே உத்தரவாக ஏற்றுக்கொண்டேன்.

அவள் கூற்று படியே… விடிந்ததும், இதுநாள்வரை வைத்து வழிபட்ட தாயின் முகம், பிடிமண் பானை, கொடுவாள், சிலம்புகள், தீச்சட்டி, உடுக்கை , காலில் கட்டிய சலங்கை யாவையும் உரிய வழிபாட்டுக்கு பின் குடும்பத்தோடு சென்று நெய்தல்காரியிடம் (கடலண்ணையிடம்) ஒப்படைத்துவிட்டேன். அலைகள் வழக்கத்தைவிட ஆவேசமாக எழுந்து வந்து யாவற்றையும் வாங்கிச் சென்றது.

என் முடியில் இருந்து இறங்கிக் கொள்ளும் அடையாளமாய் கொஞ்சம் தலைமுடி கத்தரித்து தரச்சொன்னாள். ஆசீர்வதித்தாள்.கனத்த இதயத்தோடு திரும்பினோம்.

கண்ணகி வழிபாட்டாளராக இதுவே என் கடைசி பதிவு. என்னை அறிந்த பக்தர்கள் கண்ணகி அம்மன் வழிபாடு தொடர்பாக, சிறியவனோடு இனி யாதொரு தொடர்பும் மேற்கொள்ள வேண்டாம்.
முடிவை, தெரிவிக்கவே…இப்பதிவு!
நன்றி,
யாணன்

——————————————————————————————-

இப்பதிவிற்கு …Viswasree Maharaj Sevasharm’s

வெளியிட்டிள்ள அறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

சில நாட்கள் முன்பு நமது நண்பர் அருள் திரு யாணன் அவர்கள் அரசியல் விஷயங்கள் பற்றி தனது கருத்துக்களை ஒரு நாளிதழின் மின் பதிவில் அளித்திருந்தார். அது கண்டவுடன் நாம் அவருக்கு சில விஷயங்களை பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் அவரின் தனது கண்ணகி அம்மனின் சேவைகளில் ஒன்றான குறிசொல்லும் விஷயங்களை இன்றோடு அவளின் கட்டளைப்படி கைவிட்டதாக அறிவித்தார்.

இது தொடர்பாக அவருடன் நாம் நண்பர் என்னும் வகையில் நேரடியாக தொடர்பு கொண்டபோது அவர் சில விஷயங்களை நம்மிடம் வெளிப்படையாக தெரிவித்தார்.

அதில் எந்த அரசியல் குறுக்கீடும் இல்லை. ஆனால் சர்வ தேச அளவில் தனது வளர்ச்சியையும் கண்ணகி அம்மனின் விஷயங்களை தான் வெளிக்கொண்டு வருகின்ற விஷயத்தில் இருந்த சில எதிர்ப்புகளும் வரவேற்புகளும் பற்றி குறிபிட்டார்.

யார் குறுக்கீடும் இதில் இல்லை எனவும் யாருக்கு அஞ்சியும் முடிவினை எடுக்கவில்லை என தெளிவாக குறிப்பிட்டார். இவை அனைத்தும் அன்னையின் கட்டளைப்படியே நடந்தேறியது என்றும் தெரிவித்தார். அது சமயம் அவருக்கு சில விளக்கங்களை நாம் அளித்தோம். அதில் சிலவற்றை நாம் இங்கே அவரின் வழிகாட்டுதலால் நன்மை அடைந்த சிலருக்காகவும் தெளிவில்லாமல் பேசும் சிலருக்கும் தெரிவிக்கவே இந்த பதிவு.

முதலில் கண்ணகியம்மன் புகழ் என்றும் நிலைக்கும். அதனை உயர்த்தாவிட்டாலும் எதிர்க்கும் சக்திகள் நிச்சயம் மறையும்.

அடுத்து, தமிழர் என்றோ பிற மொழி குலம் சார்ந்தவர் என்றோ அமானுஷ்யம் தனது அருளை வழங்குவதில்லை. அப்படி வழங்கினால் அது உண்மை சக்தியாக இருக்காது.

அடுத்து, இது புரியாத சிலர் அதனை எதிர்த்தார்கள் என்றால் அவர்களுக்கு அடிப்படை உயிர் மற்றும் ஆன்மா சம்பந்தப்பட்ட தெளிவு இல்லை என்றே பொருள்.

இறை நியதியில் தர்மம் ஒன்றே பொது. அதர்மமும் அதன கீழ் தான். எப்போது தன்னை நிலை நாட்டிக்கொள்ள விரும்புமோ அப்போது அதற்கான செயலை செய்யும்.

யாணன் என்னும் ஒரு உயிர் வழி இல்லை எனில் வேறு ஒரு உயிர் வழி தனது செயலை அவள் நிச்சயம் செய்வாள்.

மேலும் அவள் தமிழச்சி இல்லை தெலுங்கச்சி இல்லை இந்தியர் இல்லை என்பன எல்லாம் உடல் உள்ளவரை மட்டுமே. அதனை கடந்த பின் நிலைமை வேறு. எனவே நிச்சயமாக சொல்கிறோம் விரைவில் அடுத்த பரிமாணம் துவங்கும்.

நாம் கண்டவரை திரு யாணன் இதனை வைத்து கால் காசு தனக்கு என பெறவில்லை. பெற்ற அனைத்தும் பொது சேவைக்கு அதுவும் மிக தாழ்த்த நிலையில் உள்ளவருக்கு மட்டுமே தானமாக அளித்துள்ளார்.

மேலும் இறுதியாக…….ஆனால் உறுதியாக, என்று உடலை கடந்து உண்மையை ஒருவன் காண்கிறானோ அவனுக்கே இறை அருள் கிடைக்கும். திரு யாணன் பொறுத்தவரை தனக்கு அவள் அளித்த கடமையை நிறைவாக செய்து அடுத்த கட்ட தனது ஆன்மீக பணிகளை துவங்க ஆரம்பித்துவிட்டார். அதில் சிறக்க வாழ்த்துக்கள்.

சனாதன தர்மத்தின் படி தனது கண்ணகி வழிபாட்டு குழுவின் சேவையை செய்த அவரால் ஜாதி மதம் குலம் கடந்து அவரால், அம்மானால் நன்மை அடைந்த பலரும் அவரையும் வாழ்த்துவோம், கண்ணகி அம்மனின் அருள் மீண்டும் உலகுக்கு கிடைக்க வேண்டுவோம்..

எதிர்பவர்கள் காலத்திற்கும் அதனை செய்வதன்றி வேறு அறியார். “எதிர்ப்புகள் இலாது உயர்வு இல்லை”. எனவே யாணன் தன வழியை சரியாக செய்கிறார் என்பது பலருக்கும் இதன் வழி நாம் தெளிவுபடுத்துகிறோம். –

==============================================================================================

முகநூலில் வெளியான முடிவிற்கு வாசகர்கள் தெரிவித்த கருத்துகள்:

Antony Raj அக வழிபாட்டையே கைவிட கோரும் சூழலை
இன மொழி வாத மீறல்கள் உருவாக்கிறது என்றால் காலக்கொடுமை தான்
இறைமையில் புறத்தை கைவிட்டாலும்
அகத்தை விடாதிருப்பதே சிறப்பு !
ஒருவரது வாக்கும் மனமும் புறச்சொல்லுக்கு அதிர்ந்தாலும், அதன்வழி ஈட்டிய சித்தம் சிதறாது யாணன்வாழ்த்துக்கள்ike · Reply · Message · March 2 at 2:08pm

Ar Ravikumar யாரோ ஒருவர் கூறினாரென்று தாங்கள் வழிபாடு செய்து வந்த ஆற்றலை எப்படி நீர் தாரை வார்க்கலாம்

Sivaraman Ayyam PerumalSivaraman Ayyam Perumal அய்யா. என்ன இது? ஏன் இந்த விபரீத முடிவு? நல்லவர்களின் மனத்தை நடுங்க வைப்பவர்கள் காணாமல் போவார்கள்.Like · Reply · Message · 2 · March 2 at 10:42pm

 Ravichandran KumaraswamyRavichandran KumaraswamyEnna ayya…ithu…naam ini ..yaarai nambuvathu…..

Moni Subramonian தர்மம் நிலைகுலையலாமா ?
அன்னையின் புகழ்பரப்பிய தாங்கள் தடுமாறலாமா ?
கண்ணகி தாயே அன்று உன் சிலை சென்னையில் பெயர்க்கப்பட்டது
கடலோ கறை கடந்தது
இன்று உன் புகழ்பரப்பிய”மைந்தனோ”
கனத்த இதயத்துடன்
உனக்கு தென் தமிழகம் புடிக்கவில்லையா இல்லை உன்பிள்ளைகளை பார்க்க விருப்பமில்லையா
தர்ம தேவதையே நீயே கேள்வியும் பதிலும்.
Like · Reply · Message · 1 · March 2 at 1:54pm

அஸ்வத்தாமன் சேரன்அஸ்வத்தாமன் சேரன்தவறான முடிவு…எதிலிகள் சூழ்ச்சிக்கு பலியாகிவிட்டீர்களே ஐயாLike · Reply · Message · March 3 at 7:24am

 Sivaraman Ayyam Perumal அய்யா. ஏன் இந்த விபரீதம்? சற்று ஆலோசனை செய்திருக்கலாமே? நல்லவர்கள் மனம் நடுங்க காரணமானவர்களை அன்னை, களை எடுப்பார்.

Darwin Eric Fernando மிகவும் வருத்தமளிக்கிறது. அடையாளங்கள் அகற்றப்படலாம்.அவற்றின் சுவடை யாராலும் அகற்ற இயலாது. தனிமனிதனின் வக்கிர எண்ணங்கள் தான் பல சரணாலயங்கள் அழிய காரணமாகிறது.Like · Reply · 4 · March 2 at 1:54pm