Tag Archives: ஆட்டுரல்

அகழாய்வில் அம்மிக்குழவிகள்!

Standard

ammi kozhavi

ஒரு காலத்தில் அம்மிக்குழவி, ஆட்டுரல், அரிசி மாவு அரைக்கும் இயந்திரம் இல்லாத வீடுகள் இருக்காது. அப்படி ஓரிரெண்டு வீடுகளில் ஆட்டுரல் இல்லாதவர்கள், இருப்பவர்கள் வீடுகளுக்கு ஊறவைத்த அரிசி உளுந்தை எடுத்துச் சென்று… கதைப்பேசியப்படியே மாவு அரைத்து வருவார்கள்.

அறுவடைக் காலங்களில் பெரிய கூண்டு வண்டிகளில் அம்மிக்குழவி, ஆட்டுரலை எடுத்து வந்து விற்பார்கள். சிறு வயதில் பார்த்திருக்கிறேன். அரைத்து அரைத்து குழவிகள் மென்மையானதும், அதை மீண்டும் கொத்திக்கொடுக்க கூவிக்கொண்டே தொழிலாளிகள் தெருக்களில் வருவார்கள்.

கிரைண்டரும், மிக்ஸியும் வந்த பிறகு அம்மிக்குழவியும், ஆட்டுரல்களும் பல வீடுகளில் ஓய்வு எடுக்க துவங்கின. திருமன சீர்வரிசைகளில் பிடித்திருந்த முக்கிய இடத்தை இழந்தன. ஏற்கனவே வீடுகளில் ஓய்வெடுத்த ஆட்டுரல்கள் தொல்லையில்லாத இடங்களுக்கு நகர்த்தி வைக்கப்பட்டன.

சென்னை நகரில், அப்படி ஒரு வீட்டில் இருந்த அம்மிக்குழவி, ஆட்டுரலை, இனி பயன் படாதது என இறுதி முடிவு எடுத்து குப்பைதொட்டி அருகே போட்டுவிட்டார்கள். இந்த நிகழ்வுகள் ஆங்காங்கே நிகழலாம்.

முந்நூறு, நானூறு ஆன்டுகளுக்குப் பிறகு… தமிழகத்தில் அகழாய்வு ஆய்வாளர்கள் புதைந்து போன அம்மிக்குழவி, ஆட்டுரல்களை,   மண்னுக்கு அடியில் இருந்து எடுப்பார்கள். அந்தக்கால தமிழச்சிகள் இத்தனை எடை மிகுந்த அம்மிக்குழவி, ஆட்டுரல்களை, கைகளால் தூக்கி அரைத்தார்கள் என வர்ணிப்பார்கள்.

இப்போது கண்டெடுக்கப்படும் முதுமக்கள் தாழிகளை வியந்து பார்க்கும் இன்றைய தமிழர்களைப் போல, அன்றை அதிநவீன மக்களும் அம்மிக்குழவியை வியந்துப் பார்ப்பார்கள். கால சூழற்சியில் இன்றைய மனிதர்கள் கூட அப்போது கற்கால மனிதர்களாக பார்க்கவும் நேரலாம். அந்தளவுக்கு விஞ்ஞானதின் வேகம் இருக்கும்.