Tag Archives: உணவு

சித்த மருத்துவத்தில் அசைவமும் மருந்தே!

Standard

சென்னைத் தாம்பரம் சானடோரியத்தில் அமைந்துள்ளது, தேசிய சித்த மருத்துவ நிறுவனம். அயோத்திதாசு பண்டிதர் பெயரால் இயங்கும் சித்த மருத்துவமனையும் இவ்வளாகத்தில் உள்ளது.

இவ்நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் சோ. பூபதிராஜை சூன் 2008 இல் சந்தித்து உரையாடிய போது, சித்த மருத்துவம் குறித்த பல தெளிவான, வியப்பானத் தகவல்கள் கிடைத்தன.

பயனுள்ள அத்தகவல்கள், கேள்வி பதில் வடிவில் கீழே…

 சித்த மருத்துவம் என்றால் என்ன?

சித்த மருத்துவம் என்பது தமிழ் மக்களுக்காகத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவம். வாழ்க்கை நெறிமுறைகளை அவர்கள் எப்படி வாழ வேண்டுமென்பதற்கான உரிய நெறிமுறைகளைத் தொகுத்தவர்கள் சித்தர்கள். எந்தவிதமான வசதியும் இல்லாத காலத்திலும் இந்த நோய்க்கு இந்த மருந்து எனவும் அது எவ்வளவு காலத்தில் தீரும் என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளனர். அவர்கள் கூறியதை அறிவியலும் உணர்ந்து ஏற்றுக் கொள்ள பல நூறு ஆண்டுகள் ஆயின. எடுத்துக்காட்டாகக் காமாலை நோய்க்குக் கீழாநெல்லியைச் சித்தர்கள் மருந்தாகக் கொடுத்தனர்.ஆனால் இப்போது தான் வெளிநாடுகளில் கீழாநெல்லியை மருந்தாக அறிவித்துள்ளனர்.

 சித்தர்கள் கூறிய வழியில் மூலிகைகளை மட்டுமல்லாது பாடானங்கள், சீவ பொருட்கள் இவை அனைத்துமே நாங்கள் மருந்தாகப் பயன்படுத்துகிறோம்.அண்மையில் இலண்டன் பல்கலைகழகத்தில் பாடானம் என்று சொல்லக்கூடிய ஆர்சனிக்கை ஆய்வு செய்து, அது புற்று நோய்க்கு மிகச் சிறந்த மருந்து என அறிவித்துள்ளனர். ஆனால் ஆங்கில மருத்துவம் பாடானம் என்றால் நச்சுத் தன்மை வாய்ந்தது அதைப் பயன்படுத்தக்கூடாது என வலியுத்துகிறது.

 மூலிகை சார்ந்த மருத்துவம் மட்டும்தான் சித்த மருத்துவமா?

வெறும் மூலிகை மட்டுமல்ல, அதற்குள் வாதம், வைத்தியம், ஞானம், யோகம் இவை உள்ளடங்கியுள்ளன. வாதம் என்பது தாழ்த்தப்பட்ட உலோகத்தை உயர்ந்த உலோகமாக மாற்றுவது. அதாவது செம்பு, இரும்பு போன்ற தாழ்ந்த உலோகங்களைத் தங்கமாக மாற்றும் ஆற்றல் படைத்தவர்களாகச் சித்தர்கள் விளங்கியுள்ளனர். அப்படி மாற்றுகிறபோது தாயாரிக்கப்பட்ட முறைகளை மருந்தாக தந்தனர். அதுவே மருத்துவமானது. அதன்பின் யோகம். யோகம் என்பது பிராணயாமம், யோகாசனம் போன்ற அட்டமாசித்திகளையும், அட்டாங்க யோகங்களையும் அடக்கியது ஆகும்.

 அடுத்த நிலைதான் ஞான நிலை. அந்த ஞான நிலையை அடைவதற்காக இந்த உடம்பு தேவைப்படுகிறது. அந்த உடம்பு நீண்ட காலம் இருக்க வேண்டும். அதற்கு காயகல்பம் என்ற முறையில் சில வழிகளை வைத்துள்ளனர். அதனைப் பயன்படுத்துகிற பொழுது இந்த உடல் நீண்ட நாள் இருக்கும். அதாவது பிறவிப் பெருங்கடல் நீந்த இந்தக் கருவி வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களைச் சித்த மருத்துவம் தருகிறது.

 மயக்கம் தரும் மூலிகைகளின் துணை கொண்டு அறுவை மருத்துவங்களையும் சித்தர்கள் கையாண்டிருக்கிறார்கள். இப்போது நாம் அதை பின்பற்றுவதில்லை.

 மருத்துவக் குறிப்புகளைச் சித்தர்கள் எந்த வடிவில் வழங்கியுள்ளார்கள்?

சித்தர்கள் சீடர்களுக்குக் கூறிய குறிப்புகள் வாய்மொழியாக வழங்கப்பட்டு பின்னர் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டன. அதுவே இப்போது பயன்படுகிறது. இது, தமிழில் மட்டுமே எழுதப்பட்டது. ஆயுர்வேதம் சமற்கிருத்தில் எழுதப்பட்டது. தமிழில் நல்ல புலமை உடையவர்கள் மட்டுமே மருத்துவத்தை உணரும் வண்ணம் மறைபொருளாகப் பாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளதுதான் இதன் சிறப்பு. தமிழும் மருத்துவமும் நன்கு அறிந்தவர்கள் மட்டுமே இதில் ஈடுபட வேண்டும் என்பதற்காக இப்படி எழுதியுள்ளனர்.

 குறிப்பாக என்ன மாதிரி நோய்களுக்குச் சித்த மருத்துவம் மிகச் சிறந்த பயனைத்தரும்?

தோல் நோய்க்குச் சித்த மருத்துவத்தை விட்டால் வேறு சிறந்த மருத்துவம் இல்லை. இந்த மருந்தைத் தொடர்ச்சியாக உண்பதால் எந்த பக்க விளைவும் இருக்காது. ஆனால் ஆங்கில மருத்துவத்தில் சிறாய்டு போன்ற மருந்துகளைத் தருவதால் பக்க விளைவுகள் வரும். அதேபோல் பக்க வாதம் போன்ற நோய்களுக்கு எங்களிடம் சிறப்பான மருந்துகள் உள்ளன. தொக்கனம், வர்மம் போன்ற முறைகளைப் பயன்படுத்துகிறோம். மக்களிடம் அதிகமாக‌ இப்போழுது காணப்படும் மூட்டு வலிக்கு எங்களிடம் சிறப்பான மருந்து இருக்கிறது. அதே போல் நீரிழிவு நோய்க்கும் மருந்துகள் உள்ளன.

சித்த மருத்துவத்தில் உணவுக் கட்டுப்பாடு எப்படி? அசைவம் சேர்க்கலாமா?

உணவுக் கட்டுபாடு நோயர்களின் தன்மையைப் பொறுத்து இருக்கும். உடல் கூறுகளை மூன்று விதமாகப் பிரித்துள்ளனர். வாத உடல், பித்த உடல், கப உடல். உடல்களின் கூறுகளைப் பொறுத்து உணவைப் பிரித்துள்ளனர்.

 சித்த மருத்துவத்தில் அசைவம் தவிர்க்கப்படுவதில்லை, நாங்கள் அசைவத்தையே மருந்தாகக் கொடுக்கிறோம். உடும்புக் கறியை லேகியமாக்கித வழங்குகிறோம். நத்தை, ஆமை, சங்கு இவற்றின் ஓட்டை பசுப்பமாக்கித் தருகிறோம். கருங்கோழியைச் சூரணமாக்கித் தருகிறோம். அதனுடைய முட்டையில் இருந்து தைலம் எடுக்கிறோம். அது நாக்கு வாதத்திற்கு மிக நல்ல மருந்து. மனித மண்டை ஒடு, நாய் மண்டை ஓட்டில் இருந்து மன நோய்களுக்கான மருந்து உருவாக்கின்றோம். அட்டைப் பூச்சிகளை வெளிப் புற மருத்துவத்திற்குப் பயன்படுத்துகிறோம். மக்களை சுற்றியுள்ள அனைத்தியுமே சித்தர்கள் மருந்தாகப் பயன்படுத்தியுள்ளனர்- என்றார்.

யாணன்

எதிர்காலத்தில் ஹோட்டல்கள் எப்படி இருக்கும்?

Standard

உடலின் எரிபொருள் உணவு.

அந்த உணவும் மனிதனை, போலவே பலவிதமான பரினாம வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

உலகம் முழுதும், ஆயிரக்கணக்கான உணவு வகைகள்  மனிதர்களால் விரும்பிச் சாப்பிடப்படுகிறது. அதன் சுவை, மணம் கூட்டவதிலும், கலைநயத்தோடு பரிமாறுவதிலும் கூட தனி கவனம் செலுத்தப்படுகிறது.

ஓர் ஆண்டுக்கு முன்பு மதுரை சென்றிருந்தபோது, ஹோட்டல் ஓன்றில்,(ஹோட்டலின் பெயர் நினைவில் இல்லை, மன்னிக்கவும்) கடந்த ஜம்பது ஆண்டுகளில் உணவுத் தொழில் எப்படி மாறியிருக்கிறது என்பதை ஓவியமாக வரைந்திருந்தனர்.அதோடு, எதிகாலத்தில் எப்படி மாறும் என்பதை வினாவாக்கியிருந்தனர்.

1965

1975

1985

1995

2005

2015

என்னுடைய யூகம், சப்ளையர் வந்து, சாப்பிட வந்தவரிடம்‘‘ சாப்பிட என்ன வேணும் ’’ என்று கேட்கமாட்டார். ‘‘சாப்பாடு எப்படி வேணும்’’ என்று கேட்க கூடும். சாப்பிட வந்தவரும், சாப்பாட்டில் ‘கலோரி எவ்வளவு இருக்க வேண்டும். கொழுப்பு எவ்வளவு இருக்க வேண்டும்.’ என்று சொன்ன பிறகு, அதன் படி அடுத்த பத்து நிமிடத்தில் இயந்திரம் வழியாக சாப்பாடு தாயாராகி பரிமாறக்கூடும்.

எனக்கு இன்னொரு யூகமும் உண்டு. அது, சாப்பிட வருகிறவரிடம், மனித சப்ளையர்களுக்குப் பதில் ரோபோக்கள் வந்து ஆர்டர் எடுக்கும் வாய்ப்பு உண்டு.
 
நீங்க என்ன நினைக்கிறீங்க?

குறிப்பு: ஓவியங்கள் வரையப்பட்ட‌ ஹோட்டல், மதுரை தல்லாக்குளம் பகுதியில் இருக்கும் ‘டெம்பிள் சிட்டி’ என தகவல் வழங்கிய வாசகர் திரு.குரு அவர்களுக்கு நன்றி.

குறிப்பு-2:மூன்று தலைமுறைகளாக ஹோட்டல் தொழிலில்akash muthukrishnan இருந்து வரும் திருவண்ணாமலை ஆகாஷ் ஹோட்டல் உரிமையாளர் திரு. ஆகாஷ் முத்துகிருஷ்ணன்..தனது கருத்தை(12-11-2009) நம்மிடையே பகிர்ந்துக் கொண்டார். அவை பின் வருமாறு…

‘‘சினிமாவில் இயக்குனர் யார் எனப் பார்த்து…படம் பார்க்கபோவது போல், பெரிய ஹோட்டல்களில் சமையல் மாஸ்டர்கள் பிரபலப்படுத்தப்படுவார்கள். இந்திய சினிமாவில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்ததுப் போல், ஹோட்டலிலும் நுழையக்கூடும். ‘இந்த ஹோட்டலில் எங்கள் நிறுவனத்தின் காஃபி கிடைக்கும்’ என, தனியே காஃபி, டீ நிறுவனங்கள் வரும். அதற்கான காஃபி மாஸ்டரை அந்நிறுவனமே பயிற்சி கொடுத்து அனுப்பக்கூடும். விற்கும் காஃபிகளுக்கு சதவீகித அடிப்படையில் ஹோட்டல்களுக்கு கமிஷன் கொடுக்கக்கூடும். மிக விரைவில் இப்படியான மாற்றங்கள் நிகழவும் வாய்ப்பு இருக்கு ’’ என தனது யூகங்களைப் பதிவு செய்துள்ளார்.