Tag Archives: நெல்லை

ஆ…உங்க தலையில பூச்சி!

Standard

 

‘‘இங்க ஒரு பாட்டி தலைக்குள்ளிருந்து பூச்சிகளை எடுத்து வியக்க வைக்கிறார். பூச்சிகள் எடுக்கப்பட்டபின், நல்ல தூக்கம் வருகிறது. முடி உதிவது நிற்கிறது. நாள்பட்ட தலைவலி நீங்குகிறது.’’ என நண்பர் ஒருவர் தெரிவிக்க …நமக்கு அதை நம்புவதா, வேண்டாமா எனக் குழப்பம். இருப்பினும், ஆர்வம் கார‌ணமாக நேரில் காண்பதே சரியெனப் புறப்பட்டோம்.

திருநெல்வேலி நகரை ஒட்டி அமைந்திருக்கும் சின்ன கிராமம் இரமையன்பட்டி..

சந்திமரித்த அம்மன் கோயிலை அடுத்து சிறிது நடந்தால் சாலையை ஒட்டியே இருக்கிறது அந்தப்பாட்டியின் வீடு

.

வாசலில் கார் ஆட்டோ, டூவீலர் என உள்ளே இருக்கும் கூட்டத்தை உறுதிப்படுத்தியது. உள்ளே எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டிதான் பூச்சி எடுக்கிறவர்.

வெள்ளைப்புடவை உடுத்தியிருந்தார். பாட்டியின் பெயர் ‘மகராசி’ என்றார்கள்.

உடைந்த மர நாற்காலி ஒன்றில் பூச்சி எடுக்க வந்திருக்கும் ஆளைச் உட்காரவைக்கிறார்.பின்னர் அருகே இருக்கும் அறை ஒன்றிலிருந்து ஒரு குவளை நல்ல தண்ணீர் எடுத்து வருகிறார்.

ஒரு கையால் தண்ணீரை,அமர்ந்திருப்பவரின் தலையில் ஊற்றிக்கொண்டே , மற்றொரு கையால் தலையின் பக்கவாட்டுப் பகுதியை மென்மையாகத் தேய்க்கிறார். இப்படியாகத் தலையின் இரு பக்கமும் அத் தண்ணீரை ஊற்றித் தேய்க்கிறார்.

தேய்த்து முடிந்ததும் தேய்க்கப்பட்ட அந்த இடங்களில் இதோ பூச்சி என சிலர் ”சுட்டிக் காட்ட, பார்ப்பதற்கு பூச்சி போன்று நடுவில் கறுப்பாகவும் அதைச் ”சுற்றி வெள்ளைப் பூ போலவும் தோற்றம் உள்ள சில (?)தென்படுகின்றன. அதைத்தான் மற்றவர்கள் பூச்சி என்கிறார்கள்.

“உடனே துணியால் துடைங்க” என்றனர்.

துடைத்ததும் சிறு சிறு புள்ளிகளாகத் துணியில் அவை ஒட்டிக் கொள்கின்றன.

கறுப்பாக தோன்றும் அவற்றில் உயிர் அசைவு எதுவும் இல்லை.

பூச்சி எடுக்கப்பட்ட ஆளிடமிருந்து வெறும் இருபது ரூபாய் மட்டும் தட்சணையாகப் பெற்றுக்கொள்கிறார். அதோடு, தலைக்குத் தேய்த்துக்கொள்ள சிறப்புத் தேங்காய் எண்ணெயும் தருகிறார். அதன் விலை பத்து ரூபாய்.  இந்த முப்பது  ரூபாய்க்கு மேல் எவ்வளவு கொடுத்தாலும் அவர் பெற்றுக்கொள்வதில்லை.
இதே முறையில் நம் தலையிலும் பூச்சி எடுத்துக் காட்டியதால் …

ஒரு கையால் தண்ணீரை,அமர்ந்திருப்பவரின் தலையில் ஊற்றிக்கொண்டே , மற்றொரு கையால் தலையின் பக்கவாட்டுப் பகுதியை மென்மையாகத் தேய்க்கிறார். இப்படியாகத் தலையின் இரு பக்கமும் அத் தண்ணீரை ஊற்றித் தேய்க்கிறார்.

தேய்த்து முடிந்ததும் தேய்க்கப்பட்ட அந்த இடங்களில் இதோ பூச்சி என சிலர் ”சுட்டிக் காட்ட, பார்ப்பதற்கு பூச்சி போன்று நடுவில் கறுப்பாகவும் அதைச் ”சுற்றி வெள்ளைப் பூ போலவும் தோற்றம் உள்ள சில (?)தென்படுகின்றன. அதைத்தான் மற்றவர்கள் பூச்சி என்கிறார்கள்.

“உடனே துணியால் துடைங்க” என்றனர்.

துடைத்ததும் சிறு சிறு புள்ளிகளாகத் துணியில் அவை ஒட்டிக் கொள்கின்றன.

கறுப்பாக தோன்றும் அவற்றில் உயிர் அசைவு எதுவும் இல்லை.

பூச்சி எடுக்கப்பட்ட ஆளிடமிருந்து வெறும் இருபது ரூபாய் மட்டும் தட்சணையாகப் பெற்றுக்கொள்கிறார். அதோடு, தலைக்குத் தேய்த்துக்கொள்ள சிறப்புத் தேங்காய் எண்ணெயும் தருகிறார்.

நமக்கு தலையே கிறுகிறுத்தது போல இருந்தது. இத்தனை பூச்சிகளை தலைக்குள் வைத்துக்கொண்டா நாம் இருந்திருக்கிறோம் ? நினைக்கும் போதே அருவெருப்பாகத் தோன்றியது.

‘ ‘ வ யி ற் றி ல் பூ ச் சி க ளோ டு வாழவில்லையா? அது போத்தான் இதுவும்” என்றார் அருகிலிருந்தவர்.

பூ ச் சி எ டு க் க வ ந் த வ ர் க ளி ல் ப டி த் த வ ர் போல் தோற்றம் கொண்ட ஒருவரிடம் அறிவியல் முறையாக பாட்டியின் செயலை ஆராய வேண்டும் என விவாதித்தபோது , அவர்

உடனடியாக மறுத்தார்.

“பாட்டியின் செயலை அறிவியலோடு ஒப்பிட முடியாது. 40 ஆண்டுகளுக்கு முன்பு பாட்டிக்கு இருக்கன் குடிமாரியம்மன் கோயில் பூசாரி அருள் வந்து, வரமாக இந்த பூச்சி எடுக்கும் கலையை பாட்டியின் கைகளுக்கு வழங்கியிருக்கிறார். அதிலிருந்து பாட்டி எடுக்கிறாங்க. நீங்களே பார்க்காலாம். சொம்புத் தண்ணீயில ஓண்ணுமில்ல. வெறும் கையாலே தானே தேய்க்கிறாங்க.’’ என்றார்.

அவரது பேச்சை மற்றொருவரும் ஏற்றுக்கொள்வது போல தலையாட்டிவிட்டு “நாங்க குடும்பத்தோடு ஆண்டிற்கொருமுறை வந்து பூச்சி எடுத்துப்போம். பாட்டிக்கு பிறகு அவங்களோட முதல் மருமகளுக்கு இந்த அருளை பாட்டி குடுத்திருக்காங்க” என கூடுதல் செய்தியும் தந்தார். ஒ ரு வ ர் மூ ன் று முறை எடுத்தால்தான் பூச்சி முழுவதுமாக நீங்கும் எனச் சொன்னதால் மறுநாளும் பாட்டியிடம் பூச்சி எடுக்கச் சென்றோம்.

அன்றும் நல்ல கூட்டம். பொறுமையாக அமர்ந்து பலருக்கு பூச்சி எடுப்பதை உற்றுக் கவனித்த போது பல ஐயங்கள் நம்மை மீறி மனத்தில் எழுந்தன. கைகளில் அருள் உள்ள பாட்டி ஒவ்வொரு ஆளுக்கும் பூச்சி எடுக்கும் முன் தண்ணீர் எடுப்பதற்கு என அந்த அறைக்குள் சென்று வருவது ஏன் ? அந்த தண்ணீர் வாளியை வெளியில் வைத்துக்கொண்டே, வருகிறவர்களை அமர வைத்து, எடுத்து எடுத்து ஊற்றலாமே? என எண்ணினோம்.

எனினும், தண்ணீரைக் கூர்ந்து கவனித்ததில் அதில் எந்தக் கலப்படமும் இல்லை. தண்ணீர் தெளிவாகவே இருந்தது. இனி கைகளில்தான் ஏதோ மருமம் இருக்க வேண்டும் என முடிவு செய்து அவர் அறையிலிருந்து தண்ணீர் எடுத்து வரும் போது அவரது மற்றொரு உள்ளங்கையை உற்றுக் கவனிக்கத் தொடங்கினோம்.

அவர் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அமர்ந்திருப்பவரை நோக்கி நடந்து செல்கையில், கட்டைவிரல் ம ட க் க ப் ப ட் ட உள்ளங்கைக்குள் சிறுசிறு கரும்புள்ளிகள் தென்பட்டன. அக் கரும்புள்ளிகளே த ண் ணீ ர் ஊ ற் றி தேய்க்கும் போது பூச்சிகளாகத் தெரிவதை அறிந்து கொண்டோம். ஆனால் கையில் தெரிந்த கரும்புள்ளிகளுக்கும் தலையில் தோற்றமளிக்கும் பூச்சிகளுக்கும் உருவ வேறுபாடு இருந்தது.

இம்முறை நம் தலையில் பாட்டி பூச்சி எடுத்ததும் அவற்றைத் வெள்ளைத் துணியில் ஒன்றில் கவனமாக சேகரித்துக்கொண்ட நாம் …மூலிகை மற்றும் பூச்சியியல் தொடர்பான ஆய்வறிஞர் முனைவர் மா.வை.பாலசுப்பிரமணியனை அணுகி, நடந்தவற்றை கூறி, அங்கு எடுத்த நிழ்ற்படங்களையும், சேகரித்த பூச்சிகளையும் காட்டினோம்.

அவர் விழுந்துவிழுந்து சிரித்தார். ‘‘இது பூச்சிகளே அல்ல. திருநீற்றுப்பச்சிலை, காட்டுத் துளசி போன்ற தாணியங்களின் விதைகளே இவை. இவ்விதைகள் தண்ணீர் பட்டதும் ஒருவித

வெள்ளைப் பாசி அவ்விதையைச் சுற்றி மலரும். இதை வைத்துதான் அப்பாட்டி மக்களை ஏமாற்றியுள்ளார். ஒவ்வொரு முறையும் தண்ணீர் எடுக்க அறைக்குள் செல்லும் பாட்டி, உள்ளங்கைகளில் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்ட இவ்விதைகளில் ஒரு சிட்டிகை எடுத்து இரு ஈரக்கைகளிலும் தூவிக்கொள்கிறார்.

பின்னர், ஒரு கையில் தண்ணீர் குவளையும் ,விதை தூவப்பட்ட மற்றொரு கையை லாவகமாக மறைத்தபடியும் வந்து அமர்ந்திருப்பவரின் தலையில் தண்ணீர் ஊற்றியபடி தேய்க்கிறபொழுது அவ்விதைகள் ஈரம் காரணமாக வெள்ளைப்பாசி படர்ந்து பெரிதாக வடிவம் எடுக்கிறது. இதைத் தவிர வேறொன்றுமில்லை’’ என்றார்.

திருநெல்வேலி அல்வாவுக்கு பெயர் பெற்ற ஊர்தான். ஆனால் அங்கே இப்படியும் சில அல்வாக்கள் இருக்கின்றன.

தமிழ் ஓசை-களஞ்சியம் (8 -3- 2009)