Tag Archives: வாத்திய இசை

பிரமிக்க வைக்கும் பிரேம் ஜோஸ்வா!

Standard

prem jousha

உலக இசையில் எனக்கு…சீனத்தின் பாராம்பரிய வாத்திய இசை பிடிக்கும். அரேபிய நாட்டுபுற பாடல்களும் அவ்வப்போது கேட்பது உண்டு. ஆனால் அண்மைக் காலத்தில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பிறவிக் கலைஞன் பிரேம் ஜோஸ்வாவின்(prem joshua) வாத்திய இசையை கேட்டு உருகி நிற்கிறேன்.

இந்திய,மேற்கத்திய இசைக் கருவிகளை கலந்து எழுப்பும் ஓசைக் கலவை தான் இவரது பாணி.கண்கள் விலகாமல்  பார்க்க வைக்கும் பாம்புகளின் புணர்ச்சி ஆட்டத்தைப் போன்று, கேட்ட நொடி முதல், செவிகள் சிதறாமல்  இசை அதிர்வுகளில் குவிந்து கிடக்கிறது. அப்படி ஒரு சுகம்.  திரும்ப திரும்பக் கேட்கிறேன். முதல் பிரசவமாகத்தான் உணருகிறேன்.

இந்தியாவில், மியூஸிக் டூடே நிறுவனம் பிரேம் ஜோஸ்வாவின் ஆல்பங்களை வெளீயிட்டுள்ளது. அதில் ‘முத்ரா’ என்ற ஆல்பம் முழுதும் பதிந்து கிடக்கும் இசைக்கலவை, ஆன்மாவை மகிழ்விக்கிறது. அந்த வாத்தியங்கள் பேசும் மொழி ஆன்மாவை சிரிக்க வைக்கிறது. உடல் லேசாகிறது. மனம் மேலே பறக்கிறது. புது அனுபவம் நிகழ்கிறது. முத்ரா மட்டுமல்ல, மேலும் சில ஆல்பங்களிலும் இந்த அனுபவத்தை தொட முடிகிறது.

உலகம் முழுமையும் ஒருநாள்  பிரேம் ஜோஸ்வாவின் இசை ஆளுமைக்கு தலையாட்டும். அவரது இசையை நீங்களும் கேட்டுப் பாருங்களேன்.

-யாணன்