Tag Archives: kannagi

என்னைப் பற்றிய அவதூறுகளுக்கு தாய் சொன்ன பதில்! -யாணன்

Standard

 

என்னைப் பற்றிய அவதூறுகளுக்கு தாய் சொன்ன பதில்!
—————————————————————————————-
இப்படியாக அவ்வப்போது என்னைக் குறித்து எழுதப்படுகின்றன. நாளைய தினத்துக்கு உதவுமே என ஒருநாளும் நெல்மணிகளைச் சேர்த்து வைக்காத பறவை வாழ்வுதான் அடியேன் வாழ்க்கை! என் அறநெறியான வாழ்வை அவள் அறிவாள்! என்னைச் சந்தித்தவர்களும் நன்கு அறிவார்கள்!

இதுபோன்றவற்றை வழக்கமாக அலட்சியப்படுத்தும் அடியேன், இம்முறை அவள் சம்பந்தப்பட்டதை அவளிடமே கேட்போம் என முடிவு செய்தேன்.

நடு இரவில்…
ஏன் இப்படிஎழுதப்படுகிறது? இதற்கு என்ன பதில்? கேட்டேன்.
தாய் சொன்ன பதில்… சரியெனப்பட்டது. அதையே உத்தரவாக ஏற்றுக்கொண்டேன்.

அவள் கூற்று படியே… விடிந்ததும், இதுநாள்வரை வைத்து வழிபட்ட தாயின் முகம், பிடிமண் பானை, கொடுவாள், சிலம்புகள், தீச்சட்டி, உடுக்கை , காலில் கட்டிய சலங்கை யாவையும் உரிய வழிபாட்டுக்கு பின் குடும்பத்தோடு சென்று நெய்தல்காரியிடம் (கடலண்ணையிடம்) ஒப்படைத்துவிட்டேன். அலைகள் வழக்கத்தைவிட ஆவேசமாக எழுந்து வந்து யாவற்றையும் வாங்கிச் சென்றது.

என் முடியில் இருந்து இறங்கிக் கொள்ளும் அடையாளமாய் கொஞ்சம் தலைமுடி கத்தரித்து தரச்சொன்னாள். ஆசீர்வதித்தாள்.கனத்த இதயத்தோடு திரும்பினோம்.

கண்ணகி வழிபாட்டாளராக இதுவே என் கடைசி பதிவு. என்னை அறிந்த பக்தர்கள் கண்ணகி அம்மன் வழிபாடு தொடர்பாக, சிறியவனோடு இனி யாதொரு தொடர்பும் மேற்கொள்ள வேண்டாம்.
முடிவை, தெரிவிக்கவே…இப்பதிவு!
நன்றி,
யாணன்

——————————————————————————————-

இப்பதிவிற்கு …Viswasree Maharaj Sevasharm’s

வெளியிட்டிள்ள அறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

சில நாட்கள் முன்பு நமது நண்பர் அருள் திரு யாணன் அவர்கள் அரசியல் விஷயங்கள் பற்றி தனது கருத்துக்களை ஒரு நாளிதழின் மின் பதிவில் அளித்திருந்தார். அது கண்டவுடன் நாம் அவருக்கு சில விஷயங்களை பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் அவரின் தனது கண்ணகி அம்மனின் சேவைகளில் ஒன்றான குறிசொல்லும் விஷயங்களை இன்றோடு அவளின் கட்டளைப்படி கைவிட்டதாக அறிவித்தார்.

இது தொடர்பாக அவருடன் நாம் நண்பர் என்னும் வகையில் நேரடியாக தொடர்பு கொண்டபோது அவர் சில விஷயங்களை நம்மிடம் வெளிப்படையாக தெரிவித்தார்.

அதில் எந்த அரசியல் குறுக்கீடும் இல்லை. ஆனால் சர்வ தேச அளவில் தனது வளர்ச்சியையும் கண்ணகி அம்மனின் விஷயங்களை தான் வெளிக்கொண்டு வருகின்ற விஷயத்தில் இருந்த சில எதிர்ப்புகளும் வரவேற்புகளும் பற்றி குறிபிட்டார்.

யார் குறுக்கீடும் இதில் இல்லை எனவும் யாருக்கு அஞ்சியும் முடிவினை எடுக்கவில்லை என தெளிவாக குறிப்பிட்டார். இவை அனைத்தும் அன்னையின் கட்டளைப்படியே நடந்தேறியது என்றும் தெரிவித்தார். அது சமயம் அவருக்கு சில விளக்கங்களை நாம் அளித்தோம். அதில் சிலவற்றை நாம் இங்கே அவரின் வழிகாட்டுதலால் நன்மை அடைந்த சிலருக்காகவும் தெளிவில்லாமல் பேசும் சிலருக்கும் தெரிவிக்கவே இந்த பதிவு.

முதலில் கண்ணகியம்மன் புகழ் என்றும் நிலைக்கும். அதனை உயர்த்தாவிட்டாலும் எதிர்க்கும் சக்திகள் நிச்சயம் மறையும்.

அடுத்து, தமிழர் என்றோ பிற மொழி குலம் சார்ந்தவர் என்றோ அமானுஷ்யம் தனது அருளை வழங்குவதில்லை. அப்படி வழங்கினால் அது உண்மை சக்தியாக இருக்காது.

அடுத்து, இது புரியாத சிலர் அதனை எதிர்த்தார்கள் என்றால் அவர்களுக்கு அடிப்படை உயிர் மற்றும் ஆன்மா சம்பந்தப்பட்ட தெளிவு இல்லை என்றே பொருள்.

இறை நியதியில் தர்மம் ஒன்றே பொது. அதர்மமும் அதன கீழ் தான். எப்போது தன்னை நிலை நாட்டிக்கொள்ள விரும்புமோ அப்போது அதற்கான செயலை செய்யும்.

யாணன் என்னும் ஒரு உயிர் வழி இல்லை எனில் வேறு ஒரு உயிர் வழி தனது செயலை அவள் நிச்சயம் செய்வாள்.

மேலும் அவள் தமிழச்சி இல்லை தெலுங்கச்சி இல்லை இந்தியர் இல்லை என்பன எல்லாம் உடல் உள்ளவரை மட்டுமே. அதனை கடந்த பின் நிலைமை வேறு. எனவே நிச்சயமாக சொல்கிறோம் விரைவில் அடுத்த பரிமாணம் துவங்கும்.

நாம் கண்டவரை திரு யாணன் இதனை வைத்து கால் காசு தனக்கு என பெறவில்லை. பெற்ற அனைத்தும் பொது சேவைக்கு அதுவும் மிக தாழ்த்த நிலையில் உள்ளவருக்கு மட்டுமே தானமாக அளித்துள்ளார்.

மேலும் இறுதியாக…….ஆனால் உறுதியாக, என்று உடலை கடந்து உண்மையை ஒருவன் காண்கிறானோ அவனுக்கே இறை அருள் கிடைக்கும். திரு யாணன் பொறுத்தவரை தனக்கு அவள் அளித்த கடமையை நிறைவாக செய்து அடுத்த கட்ட தனது ஆன்மீக பணிகளை துவங்க ஆரம்பித்துவிட்டார். அதில் சிறக்க வாழ்த்துக்கள்.

சனாதன தர்மத்தின் படி தனது கண்ணகி வழிபாட்டு குழுவின் சேவையை செய்த அவரால் ஜாதி மதம் குலம் கடந்து அவரால், அம்மானால் நன்மை அடைந்த பலரும் அவரையும் வாழ்த்துவோம், கண்ணகி அம்மனின் அருள் மீண்டும் உலகுக்கு கிடைக்க வேண்டுவோம்..

எதிர்பவர்கள் காலத்திற்கும் அதனை செய்வதன்றி வேறு அறியார். “எதிர்ப்புகள் இலாது உயர்வு இல்லை”. எனவே யாணன் தன வழியை சரியாக செய்கிறார் என்பது பலருக்கும் இதன் வழி நாம் தெளிவுபடுத்துகிறோம். –

==============================================================================================

முகநூலில் வெளியான முடிவிற்கு வாசகர்கள் தெரிவித்த கருத்துகள்:

Antony Raj அக வழிபாட்டையே கைவிட கோரும் சூழலை
இன மொழி வாத மீறல்கள் உருவாக்கிறது என்றால் காலக்கொடுமை தான்
இறைமையில் புறத்தை கைவிட்டாலும்
அகத்தை விடாதிருப்பதே சிறப்பு !
ஒருவரது வாக்கும் மனமும் புறச்சொல்லுக்கு அதிர்ந்தாலும், அதன்வழி ஈட்டிய சித்தம் சிதறாது யாணன்வாழ்த்துக்கள்ike · Reply · Message · March 2 at 2:08pm

Ar Ravikumar யாரோ ஒருவர் கூறினாரென்று தாங்கள் வழிபாடு செய்து வந்த ஆற்றலை எப்படி நீர் தாரை வார்க்கலாம்

Sivaraman Ayyam PerumalSivaraman Ayyam Perumal அய்யா. என்ன இது? ஏன் இந்த விபரீத முடிவு? நல்லவர்களின் மனத்தை நடுங்க வைப்பவர்கள் காணாமல் போவார்கள்.Like · Reply · Message · 2 · March 2 at 10:42pm

 Ravichandran KumaraswamyRavichandran KumaraswamyEnna ayya…ithu…naam ini ..yaarai nambuvathu…..

Moni Subramonian தர்மம் நிலைகுலையலாமா ?
அன்னையின் புகழ்பரப்பிய தாங்கள் தடுமாறலாமா ?
கண்ணகி தாயே அன்று உன் சிலை சென்னையில் பெயர்க்கப்பட்டது
கடலோ கறை கடந்தது
இன்று உன் புகழ்பரப்பிய”மைந்தனோ”
கனத்த இதயத்துடன்
உனக்கு தென் தமிழகம் புடிக்கவில்லையா இல்லை உன்பிள்ளைகளை பார்க்க விருப்பமில்லையா
தர்ம தேவதையே நீயே கேள்வியும் பதிலும்.
Like · Reply · Message · 1 · March 2 at 1:54pm

அஸ்வத்தாமன் சேரன்அஸ்வத்தாமன் சேரன்தவறான முடிவு…எதிலிகள் சூழ்ச்சிக்கு பலியாகிவிட்டீர்களே ஐயாLike · Reply · Message · March 3 at 7:24am

 Sivaraman Ayyam Perumal அய்யா. ஏன் இந்த விபரீதம்? சற்று ஆலோசனை செய்திருக்கலாமே? நல்லவர்கள் மனம் நடுங்க காரணமானவர்களை அன்னை, களை எடுப்பார்.

Darwin Eric Fernando மிகவும் வருத்தமளிக்கிறது. அடையாளங்கள் அகற்றப்படலாம்.அவற்றின் சுவடை யாராலும் அகற்ற இயலாது. தனிமனிதனின் வக்கிர எண்ணங்கள் தான் பல சரணாலயங்கள் அழிய காரணமாகிறது.Like · Reply · 4 · March 2 at 1:54pm

யாணன் நேர்காணல் தொடர்ச்சி…!

Standard

yaanan-interview

இலங்கையில் இருந்து வெளியாகும் மாத இதழ் வண்ண வானவில். இவ்விதழில் அடியேன் உரையாடலின் தொடர்ச்சி…

இந்திர விழா விளக்குவீர்களா?

கோவலன் மாதவியைப் பிரிந்து கண்ணகியை அடைந்து மதுரை புறப்படுவது வைகாசி மாதம் பௌர்ணமி நாளுக்கு அடுத்தநாள். புகார் நகரில் சித்திரை மாதம் சித்திரை நாளில் இந்திரவிழாத் தொடங்கி ஒரு மாதம் நடைபெறும்.  இளங்கோ இதனை “சித்திரைச் சித்திரைத் திங்கள் கேர்ந்தென(5:64) எனக் காட்டுவார். இந்திராவிழா முடிந்த நாளில் அதாவது வைகாசி பௌர்ணமிக்கு அடுத்தநாள் மதுரை புறப்படுகிறாள். மதுரைக்காண்ட நிகழ்ச்சிகள் ஏறத்தாழ இரண்டரை மாத நிகழ்ச்சிகள்.

இந்திர விழாவின் தத்துவம், இந்திரனை சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். பசி, பிணி, பகையினால்  துன்பம் அடையாது இருக்க,  தெய்வத்திற்கு பலிகொடுத்து வழிபடுதலே இந்திர விழா. இவ்விழாவைத் தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகின்றார்.
இவ்விழா புகார் என்ற நகரோடு அதிகம் தொடர்புற்றிருந்தாலும், மதுரையிலும் கொண்டாடப்பட்டது. இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு இவ்விழா சிறப்பு பெற்றிருந்தது. தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன் என்ற சோழ மன்னன் எடுத்த காதல் விழாவைக் காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர்.

சிலப்பதிகாரம், மணிமேகலை காலங்களில் இவ்விழா அரசாங்க விழாவாகவே கொண்டாடப்பட்டது. கற்பகக் கோட்டத்தில் வெள்ளானைக்கொடி ஏற்றப்பட்டது. பல தெய்வங்களுக்கும் பூசையிடப்பட்டு, இசையும் கூத்தும் கலந்து  இன்பமூட்டிய விழா. அறிஞர்கள் குழுமியிருந்து பட்டி மண்டபத்தில் வாதிட்டனர். பல்வேறு சமயத்தவரும் செற்றமும் கலகமும் செய்யாது ஒற்றுமையாய் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்விதத்தில் இவ்விழா சமய ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாக இருந்துள்ளது.

கண்ணகி கதை, கற்பு அறம் என்றெல்லாம் சொல்லிச் சொல்லியே தன் பெண்களை அடக்கி வந்திருக்கிறான் தமிழன். இதெல்லாம் இன்னும் அவசியமா? தமிழ்ப் பெண் கண்ணகி பெண்ணாகவா அல்லாது பெரியார் பெண்ணாகவா இருக்க வேண்டும்?

’’இருதாரம், பல தாரம் கொண்டோர், மனைவிக்கு தெரியாமல் மற்றொரு தொடர்பு வைத்திருக்கும் முற்போக்குவாதிகளில் பலர் தான்… பெண் சுதந்திரம் என்ற போர்வைக்குள் நுழைந்து தங்களை நம்பி வந்த மனைவிக்கு செய்யும் துரோகத்தை மறைக்கும் வகையில் கற்பு, கண்ணகிக்கு எதிராக கருத்து எழுப்புவர்…கற்பு என்பது சுயஒழுக்கம் என்பதை தாண்டி உணரதக்க ஓர் சொல். கற்பு என்றால் தெய்வீகம் குடிகொள்ளும் சொல். அதை அவரவர் மனசாட்சியால் மட்டுமே உணர முடியும். கற்புடைய பெண் மட்டுமல்ல, ஆணும் இணைந்ததுதான் இல்லறம். அப்படியான தம்பதியரே சமூகத்தில் மனநிறைவுடன் வாழ்கிறார்கள். தன் மனைவி கற்புடையவள் எனும் நம்பிக்கையுடனே ஒவ்வொரு கணவனும் வாழ்கிறான். அதே நம்பிக்கையே கணவன் மீதும் மனைவிக்கு இருக்கிறது. இன்றும் தம்பதியர்களுக்குள் கற்பு எனும் காந்த சக்தியே பினைக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்ந்து இல்லறம் எனும் நல்லறம் நிகழ்த்துகிறார்கள். கற்பில் சந்தேகம் வந்தால்…குடும்பங்கள் என்னாகும்?

அறம், எனும் இயற்கை தரும் தண்டனைகள் தீர்ப்புகளால்தான் இன்றும் சமூகம் கட்டமைக்கப்படுவதாக அடியேன், நம்புகிறேன். ’இதனால் தான் இது நிகழ்கிறது’ என்பதை உணரும் சக்தியை மாயையில் சிக்கியவர்கள் இழந்ததின் விளைவே… எதிர் விமர்சனங்களுக்கு காரணம். அறத்தண்டனைகளைத் ’தற்செயல் நிகழ்வு’ என சாதாரணமாக எடுத்துக்கொள்வர். அது அவரவர் அறியாமை சார்ந்ததே ஆகும். கற்பு, அறம் போன்றவற்றின் மீதான நம்பிக்கையை முற்போக்கு எனும் வார்த்தையால் உடைக்க முயல்வது சமூக ஓழுக்கம் கெடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் ஓர் ஆபத்து என்பது என் கருத்து.

தமிழகத்தில் கண்ணகி வழிபாடு எப்படித் திகழ்கிறது?

கண்ணகி, கண்ணகையம்மா, கண்ணேயம்மா, கண்ணியம்மன், கண்ணம்மா, கண்ணாம்பாள், கண்ணாத்தாள், கண்ணு, கண்ணி போன்ற பெயர்கள் கண்ணகி அம்மன் மீது கொண்ட பக்தியால் கடந்தகால தமிழர்கள் தங்கள் சந்ததியினருக்கு வைத்து பரவசப்பட்டனர்.

சிலம்பு ஒரு கதைதான் எனக் கட்சி பேசுவோர் இங்கே அதிகம். கண்ணகி ஒரு காப்பியத்தின் நாயகி. அதனால் அவளை ஒரு கதாபாத்திரமாக மட்டுமே  காணுங்கள் என  வலியுறுத்தும் இறை நம்பிக்கையற்ற ஆய்வறிஞர்கள், கட்டுரைகள், நூல்கள் பல உள்ளன. இறை நம்பிக்கையுடைய தமிழர்களிடம் கூட ‘எதை வேண்டுமானலும் வழிபடு; கண்ணகியை வழிபடாதே துயரம் வரும்!’ என அச்சம் மூட்டினர்.  இத்தனைத் தடைகளைத் தாண்டி மலைவாழ்மக்கள், பழங்குடியினர், குரும்பர்கள் மத்தியில் மிகுந்த பயபக்தியோடு, மரியாதையோடு வாழ்கிறாள்.

ஆண்டுக்கு ஒரு முறை சித்திரை முழுநிலவு வழிபாடு சேரன் எழுப்பிய ஆலயத்தில் நிகழ்கிறது. அங்கே ஆண்டுதோறும் பக்தர்கள் எண்ணிக்கை கூடி வருகிறது. கடந்த சித்திரை விழாவில் சுமார் ஒரு லெட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.  பூம்பூகார் அருகே உள்ள மேலையூர் தாசில் பண்ணையில் இந்த நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கண்ணகி கோயில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் வெகு விமர்சையாக ஆடி அனுஷம் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் பூ பல்லக்கில் ஏறி விண்ணுலகம் சென்றதை நினைவுபடுத்தும் விழா சுமார் நாற்பத்து நான்கு ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது.
இனி மேலும் ஆலயங்கள் எதிர்காலத்தில் தோன்றும்.

கண்ணகி வழிபாடு வளர்ந்தால் சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும்? 

“அறநெறிகள் வளரும். மனசாட்சிக்கு
அஞ்சுவர். பாவ புண்ணியம் பார்ப்பர். தர்மச் சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகத்தில் நீதி, நேர்மை மதிக்கப்படும். நல்லோர் உயர்வர். ’’

யாணனைப் பற்றி…

“சொந்த ஊர் என எதையும் சொல்வதில்லை. உண்மையில் சொந்தம் என்று எதுவும் யாருக்கும் நிரந்தரமாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் சில காலம் சில, சொந்தமானவைப் போல் தொடருகின்றன.
பிரபஞ்சத்தின் உயிர்ப்பை நான் மரங்களில்,மலைப்பிரதேசங்களில், பறவைகளில், கடல்வெளியில், வான்வெளியில் என உணருகிறேன்.. என்னைத் தூண்டும் சக்தியாக இவையே இருக்கின்றன. இதுவரை நூற்றுக்கு மேலான மரக்கன்றுகளை நட்டு இருக்கிறேன். மரணத்திற்கு முன்பாக மேலும் பல நடக்கூடும்.

நான் எழுதும் ஆத்ம ஞான கருத்துகளே எனது அழமான நம்பிக்கை. அதுபோலவே எனது வாழ்க்கையையும் உணருகிறேன்.’’
என தன்னைக்குறித்து கூறும் இவர் அதிககாலம் வசித்தது திருவாரூரில்… இதழாளராக நீண்ட காலம் பணிசெய்த இவர், ஆன்மீக தேடலில் சிறுவயது முதலே நாட்டம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். திருவாரூரில் தான் கட்டிய வீட்டின் மீது ஓர் சிறு தியான ஆலயமும், தாமரைகள் மலர தண்ணீர் தொட்டியும் அமைத்துள்ளார். பின்னர் தைவான் நாட்டைச்சேர்ந்த தௌ(tao) எனும்  ஓர் வழிபாட்டு பிரிவில் சில ஆண்டுகள் ஈடுபட்டுள்ளார்.
கண்ணகி வழிபாடு அதுவாக தன்னை ஆட்கொண்டதாக குறிப்பிடுகிறார். தற்போது தனது முழுமையான வழிபாடு கண்ணகியும், கடல் தேவதையான மணிமேகலாவுதான் என குறிப்பிடுகிறார். தனது இல்லத்தில் நாளும் வழிபடும் இவர், வாரம் ஒருநாள் மட்டும் பொதுமக்கள் வழிபாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கிறார்.
கண்ணகி வழிபாடு மீண்டும் தழைத்தோங்க செய்யவே இப்பூமியில் தன் பிறப்பின் இரகசியம் என்பதை உணருவதாகக் குறிப்பிடுகிறார்.
இன்பம், துன்பம், ஏமாற்றம், அவமானம், ஆசீர்வாதம், அரவணைப்பு யாவும் எனது பயணத்தில் கலந்தே கடந்து சென்றிருக்கின்றன. ஒரு நல்ல சிறுகதை அமையும் வரை எழுதியதை அடித்து திருத்தி மீண்டும் மீண்டும் எழுத முயல்வதைப்போலவே நாளும் வாழ்க்கை நகர்கிறது. என்கிறார் யாணன் கவிதை மொழியில்.முற்றும்

திருமாவுடன் சந்திப்பு!

Standard

தேர்தல் நெருக்கடியால் சித்திரை முழுநிலவு விழாவின் முக்கியத்துவம் பொதுமக்கள் கவனத்தில் குறைந்துவிடாமல் இருக்க அப்போது ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்தி வர முனைந்தோம். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித்தலைவர்களைச் சந்திக்க முயற்சித்ததில் வைகோ மற்றும் திருமா அவர்களையே நம்மால் சந்திக்க முடிந்தது. அவ்வாறு திருமா அவர்களைச் சந்தித்தபோது பல்வேறு நிகழ்ச்சி நெருக்கடிகளுக்கு மத்தியில் சுமார் முக்கால் மணி நேரம் உரையாடினோம். விடைபெறும் போது எடுக்கப்பட்ட கானொளியில் இது. இரு தலைவர்களுமே மிகுந்த மதிப்பும், மரியாதையும் செலுத்தியது என்றும் மறக்க முடியாதது. -யாணன்

’’சமண மதத்துச் செட்டிச்சி என இகழ்ந்தார் ஆறுமுக நாவலர் …!’’ கண்ணகி ஆய்வாளர் யாணனுடன் ஒரு சந்திப்பு

Standard

yaanan-interview

தமிழகத்தில் அருகிவிட்ட கண்ணகி அம்மன் வழிபாடு இலங்கையில்தான் அதிகளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இவ்வழிபாட்டில் தமிழர்களைவிட சிங்களவர்களே அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சிங்களவர்களின் முக்கியமான காவல் தெய்வமாக கண்ணகி (பத்தினி தெய்யோ) விளங்குகிறாள். பில்லி, சூன்யம், செய்வினை போன்றவற்றை பத்தினியின் உதவியுடனேயே செய்வதால் சிங்கள மாந்திரிகர்களின் குலதெய்வமாக கண்ணகி வீற்றிருக்கிறாள். தமிழகத்திலிருந்து கண்ணகி அம்மன் வழிபாடு எப்படி பெரும்பான்மை சமூகத்தில் ஊடுருவியது? கண்ணகி யார்? என்ற கேள்விகளோடு தமிழகத்தில் ஒரு தேடுதலில் இறங்கியபோது எமது கண்ணில் பட்டவர்தான் எழுத்தாளர் யாணன். பிளக் ஹோல்
(Black Hole) பதிப்பகத்தை நடத்தி வரும் இவரின் ஏராளமான படைப்புகள் நூலுருவில் வெளியாகி இருக்கின்றன. அதில் பாவ புண்ணிய கணக்குகள் என்னும் நூல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நூலாகும். அதோடு கண்ணகி அம்மன் பற்றிய ஆராச்சி நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கும் இவர் தமிழகத்தில் அருகிப்போய் விட்ட கண்ணகி அம்மன் வழிபாட்டை மீட்டெடுத்து அதைப் பொதுமக்களிடம் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார். யாணனின் இந்த களப்பணிக்கு அவரின் துணைவியார் கௌரியும் பக்கபலமாக இருக்கிறார். தங்கள் இல்லத்திலேயே கண்ணகி அம்மனுக்கு உருவச்சிலை அமைத்து வழிபாடு செய்து வரும் யாணனை ஒரு இனிய மாலை வேளையில் சந்தித்து கண்ணகி அம்மன் பற்றி உரையாடினோம்.

yaanan

கண்ணகி வழிபாட்டை இலங்கைக்கு கொண்டு வந்தவர் கஜபா என்ற சிங்கள மன்னன் என்று சொல்லப்படுகிறது.. பத்தினி என்ற பெயரில் கண்ணகி வழிபாடு சிங்கள பௌத்தர்களிடம் காணப்படுகிறது. இதுபற்றி ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?

இது குறித்து சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டத்தில் குறிப்பிடப்படுகிறது. இன்றைய கேரள மாநிலம் குமுளிக்கு மேலே அமைந்துள்ளது, மங்கலதேவி கோட்டம். இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சேரன் செங்குட்டுவனால எழுப்பப்பட்டது. இமயம் சென்று திரும்ப ஐந்தரை ஆண்டுகள் பயணம் மேற்கொண்ட சேரன் செங்குட்டுவன் வடபுலத்து அரசர்களான கனக, விசயன் ஆகியோரை வெற்றி கொண்டு இமயமலையில் கல்லெடுத்து அதைக் கங்கையில் நீராட்டித் சிற்றரசர்களின் தலைச்சுமையாக இங்குக் கொண்டு வந்து அந்தக் கல்லில் கண்ணகி சிலை வடித்துள்ளான். அச்சிலையை, குன்றக் குறவர்கள் சாட்சியாக கண்ணகி விண்ணுலகம் சென்ற அம்மலையின் மீது எழுப்பபட்ட ஆலயத்தில் நிறுவி குடமுழுக்கு செய்துள்ளான். அந்நிகழ்வில் பல அரசர்கள் கலந்து கொண்டனர்.

yaanan

இலங்கையில் இருந்து கஜபாகு எனும் மன்னனும் விருந்தினராக கலந்துகொண்டுள்ளான். அன்றைய இரவு விண்ணில் விஸ்வரூப தரிசனம் தந்தாள் கண்ணகி. அதைக் கண்ட சேரன் சிலிர்ப்புற்றான். அருகில் இருந்த கஜபாகு தரிசனத்தைத் தன்னால் காண இயலவில்லையே என ஏங்கி கற்பகிரத்தினுள் சென்று ‘தாயே, அடியேன் இலங்கையில் இருந்து வந்திருக்கிறேன். நான் உனக்கு இலங்கையிலும் ஆலயம் எழுப்பி வழிபட விரும்புகிறேன். உத்தரவு வேண்டும்’ என கேட்க சிலையில் இருந்து அசரீரியாக சம்மத வாக்கு கிடைத்திருக்கிறது. பெரிதும் மகிழ்வுற்ற மன்னனிடம், சேரன் சந்தனப்பேழையில் வைத்து சிலம்புகள் வழங்கியதாக குறிப்புகள் உள்ளன. இராஜவளி என்ற சிங்கள நூலிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கண்ணகிக்குக் கோயிலமைத்த இடம் ‘அங்கணக்கடவை’ எனும் இடமாம். சிங்களநாட்டில் ‘பத்தினி தெய்யோ’ என வணங்கப்படும் தெய்வம் கண்ணகியே என்பது இலங்கையின் வரலாற்றாளரான செ. இராசநாயகத்தின் கருத்தாகும். கண்ணகியை ஒரு குறிப்பிட்ட மொழி இனத்துக்கான தெய்வமாக ஏன் சுருக்க வேண்டும்? சிங்களவர் கண்னகியை வழிபடுவது, வரவேற்கதக்கது. தமிழர் சிங்களவர் ஒற்றுமைக்கு ஓரு காரணியாக இது அமைந்திருக்கிறது.

arumuga-navalar

இலங்கை வரை வந்த கண்ணகி வழிபாடு இந்தியா முழுமைக்கும் பரவவில்லையே?

அக்கால அடித்தட்டு மக்கள் அபலைகள். சமூக பலம், பொருள் பலம் இல்லாத சாமானியர்கள். அவர்களே கண்ணகியைத் தங்களில் ஒருத்தியாகப் பார்த்தனர். கணவனோடு பிழைப்பு தேடி இடம்பெயர்ந்த இடத்தில் துயரம் நேர்ந்தபோது ஆவேசம் கொண்ட அவளுக்கு இயற்கை கைகட்டி மண்டியிட்டது! அந்தக் காட்சி சாமானிய ஏழைகளின் வாழ்வில் நம்பிக்கைகொள்ள வைத்தது. நமக்குக் கண்ணகி துணை நிற்பாள் என நெஞ்சுரத்தோடு நடந்தனர். கண்ணகியைப் போல் கறைபடாது வாழ்ந்தவர்கள் வாக்கு பலித்தது. தாங்கள் வயிறு எரிந்து வழங்கும் சாபமும் வஞ்சகர்களைக் கேட்கும் என நம்பினர். அப்படியே நடக்கவும் செய்தது. எதிர்த்து பேச முடியாத அநியாயக்காரர்களை எண்ணி மண் வாரி இறைத்தனர். ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும் என்பதைக் கையில் உண்மையான வாளோடு திரிந்தவர்கள் உணர்ந்து அடங்கினர். ஏழைகளுக்கு, அபலைகளுக்குக் கண்ணகி துணையானாள். அவளை நினைத்து நெற்றியில் மஞ்சள் பூசினர். தலையில் வேப்பிலை சூடினர். கண்ணகி துயரம் கொண்ட ஆடிமாதம் விரத மாதம் ஆனது. கண்ணகி வழிபாடு தமிழர்களிடம் அசுர வளர்ச்சிபெற்றது.

arumuga-navalar-1

ஆறுமுக நாவலர்
இந்தியாவில் தோன்றிய பௌத்தம், ஆசிய நாடுகளில் பரவியதுபோல, இஸ்ரேலில் தோன்றிய இயேசுவின் போதனைகள், பின்னர் வழிபாடாக உலகளவில் பரவியது போல, கண்ணகியும் உலகம் முழுதும் பரவி நின்றிருக்க வேண்டியவள். கண்ணகி வழிபாடு தனி ஒரு மதமாக கூட உலகம் தழுவியிருந்திருக்கும். அதை உணர்ந்தே தடுத்தனர் அரசர்களைக் கையில் வைத்திருந்தவர்கள். அவள் சமணப் பெண் என்று சமூகத்தில் தாழ்த்தினர். சிறுதெய்வ வழிபாடு என்றனர். பலி கேட்கும் தெய்வம் எனப் பழித்தனர். இதெல்லாம் எதனால்? ஒரு சாதாரண குடும்பப்பெண்ணாக இருந்தவள், ‘தவறு என்றால் அரசனாக இருந்தாலும் தட்டிக்கேள்’ எனும் நெஞ்சுரத்தை சமூகத்திற்கு விதைத்துள்ளாளே! எளியோர் அவளை வழிபடுவதின் வாயிலாக, அவள் வரலாறு திரும்ப திரும்ப நினைவுகூரப்படுவதன் வாயிலாக, அவளை அடியொற்றி ஒரு பாதை விழுந்தால், ஒரு பக்தப்படை எழுந்தால் என்னவாகும்? என்பதே, பின்னர் வந்த அரசர்களுக்கு, எடுத்துச்சொல்லப்பட்ட யோசனையாக, எச்சரிக்கையாக இருக்கலாம் எனக் கருதுகிறேன்.

பதினெட்டாம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த சைவ நெறிப் பற்றாளர் ஆறுமுகநாவலர் மிகக் கடுமையாகக் கண்ணகி வழிபாட்டை எதிர்த்துள்ளார். கண்ணகி ஒரு தமிழச்சி. முதல் புரட்சிப்பெண். தமிழர்களின் அடையாளம் எனப் பலவாறு புகழ வாய்ப்பிருந்தும், அவளை மிகச் சாதாரணமாக ‘சமண மதத்து செட்டிச்சி’ எனக் குறிப்பிட்டார் ஆறுமுக நாவலர். “அவளை ஏன் வழிபடுகிறீர்கள்?” எனக் கொச்சையாகக் கேட்டு, தன் அசுரச் செல்வாக்கால் ஆலயத்தில் இருந்து வெளியே எடுத்துள்ளார். எனினும் இலங்கையில் இன்றும் செல்வாக்கோடு இருக்கிறாள் கண்ணகி என்பது ஓர் ஆறுதல்.

கோவலன் பொட்டல்,
கோவலன் தலை வெட்டப்பட்ட கல்
சேரன் செங்குட்டுவன் ஆட்சியமைந்த கேரளா தேசத்தில் பரவி நின்ற கண்ணகி வழிபாடு பின்னர் வந்த ஆதிசங்கர் தலையீட்டால் பகவதி என பெயர்மாற்றப்பட்டாள். இன்றும் கொடுங்கநல்லூர் பகவதி, அட்டுகல் பகவதி என பல இடங்களில் பகவதியாக மிக செல்வாக்கோடு திகழ்கிறாள், கண்ணகித் தாய். மலைவாழ் மக்களான வேடுவர்கள், அவளை ‘மங்கல தேவி’ என்ற பெயரில் தெய்வமாக வணங்கியுள்ளனர். குறும்பர் பழங்குடியினர் குறும்பா பகவதி என வழிபடுகின்றனர்.

கண்ணகி கதை கற்பனையாகத்தானே இருக்க வேண்டும்?

கண்ணகி ஓர் உண்மை நிகழ்வு. அவள் ஒரு வரலாறு. அதற்குச் சான்றுகள் பல உண்டு. சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல, வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர்களில் ஒருவர், ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார்.

“மதுரையின் கிழக்கு வாயில் வழியே கணவனுடன் நுழைந்த நான், இப்போது அநாதையாக மேற்குத் திசை வழியே செல்கிறேன்” (‘கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன் மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கின்றேன்’) என்று புலம்பிவிட்டுக் கண்ணகி புறப்படுவதையும், கரடுமுரடான பாதையில் மேற்குத்திசை நோக்கி நடந்து நெடுவேள் குன்றம் ஏறி, மலர்ந்த ஒரு வேங்கை மரத்தடியில் அவள் நிற்பதையும், பதினான்காம் நாளன்று வானஊர்தியில் இந்திரன் உள்ளிட்ட தேவர்களோடு, கோவலனும் வந்து கண்ணகியைப் பணிந்து உடன் அழைத்துச் செல்வதையும் எடுத்துரைக்கிறது சிலம்பு.

அப்படி கண்ணகி மலைமேல் ஏறி, வேங்கை மர நிழலில் நின்று தெய்வமான இடத்தினையும், அவ்விடத்தில் சேரன் செங்குட்டுவன் அமைத்த பத்தினிக் கோட்டம் என்னும் கண்ணகிக் கோயிலையும் இந்நூற்றாண்டில் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்த பெருமைக்கு உரியவர் சி.கோவிந்தராசனார்.

சிலப்பதிகாரம் குறிப்பிடும் பழைய மதுரை எது என எழுத்தாளர் ஜெயமோகன் தன் பதிவு ஒன்றில் குறிப்பிடுவது, வைகைக்கு மறுபக்கம் உள்ள மணலூர் என்ற கிராமத்தையே. தென்மதுரையைச் சேர்ந்த பழங்காநத்தம் என்ற சிற்றூரில் அமைந்துள்ள கோவலன் பொட்டல் வரலாறு தொடர்புடைய ஊர். சிலப்பதிகாரத்தில் மதுரை மன்னனின் ஆணைப்படி கோவலனின் தலை இந்த இடத்தில் தான் துண்டிக்கப்பட்டுத், தண்டனையை நிறைவேற்றி உள்ளனர். இந்த இடம் அமைந்துள்ள பகுதிகள் கிமு 300 – கிபி 300 இடைப்பட்ட சங்க காலத்தில் சுடுகாடாக இருந்தவை. கோவலன் உடல் அடக்கம் செய்யப்பட்டதின் காரணமாகவே பிற்காலத்தில் கோவலன் பொட்டல் என அழைக்கப்பட்டுள்ளது.

இதை ஆராயும் வகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1980-களில் இங்கு தங்களது ஆராய்ச்சியைத் தொடங்கினர். அப்பொழுது அவர்கள் அங்கு மூன்று பெரிய முதுமக்கள் தாழிகளையும் அதன் உள்ளே மனிதனின் மண்டை ஓடுகளும் இதர எலும்புகளும், மேலும் ஒரு பக்கம் மீனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள பண்டைய பாண்டிய அரச வட்டவடிவ செப்பு நாணயங்களையும் கண்டறிந்துள்ளனர். சிலப்பதிகார நிகழ்வுகள் அனைத்தும் உண்மையே என்பதைக் காலம் சிறிது சிறிதாக உணர்த்தவே செய்கிறது. மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவலன் பொட்டல். மதுரை, புகார் மற்றும் கேரளாவில் உள்ள ஆதித்தமிழர்கள், பழங்குடிகள் பலரிடமும் கண்ணகி வரலாறு குறித்த தகவல்கள் ஏராளம் உள்ளன.

கண்ணகி துயரம் கொண்ட ஆடிமாதம் என்கிறீர்கள். அதை விளக்குங்கள்.

தமிழ் ஆய்வாளர்கள், கண்ணகியின் வாழ்வில் பெரிய மாறுதல்கள் நிகழ்ந்தது எல்லாம் ஆடி மாதத்து வெள்ளிக்கிழமைகளில்தான் என்று கூறுகிறார்கள். (தமிழறிஞர் மு.வரதராசனார்)
அவள் மதுரையை எரித்ததும் ஓர் ஆடி வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி தினத்தன்று. அதன் பின் கண்ணகி, பதினான்கு நாட்கள் நடந்துவந்து சேர்ந்த இடமே இன்றைய மங்கலதேவிக் கோட்டம். அதனால் பிற்காலத்தில் அம்மன் கோயில்கள், வெள்ளிக்கிழமைகளில் முக்கியத்துவம் பெற்றன. வெவ்வேறு பெயர்களில் எழுப்பப்பட்டுள்ள அம்மன் கோயில் பலவும் கண்ணகியின் அமைதி வடிவத்தின் அடையாளமாகவே அமைக்கப்பட்டன.

அம்மன் ஆலயங்களில் ஆடி வெள்ளியில் நடைபெறும் விழாக்களில் சிலம்பு ஒரு இசைக்கருவியாக சேர்க்கப்பட்டது. சிலம்பு வழிபாட்டிலும் இடம்பெற்றுள்ளது. கண்ணகி அணிந்த கால் சிலம்பு பொன்னால் ஆனது என்பதால் தமிழ்மரபுப் பெண்கள் இன்றளவும் காலில் பொன்னால் ஆன சிலம்பு, தண்டை, கொலுசு அணிவதில்லை. தமிழர்கள் ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதை இன்றளவும் தவிர்த்தே வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகள் பிரித்து வைக்கப்படும் மரபு தோன்றியதற்குக் காரணம், குழந்தை சித்திரை வெயிலில் பிறக்கும் எனக் கூறப்பட்டாலும் கண்ணகி கணவனை இழந்த மாதம் என்பதே பிரதானமாக இருந்து பின்னர் மாற்றி கூறப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறேன்.

கண்ணகி சாபத்தால் பொங்கி எழுந்த இயற்கை தோற்றுவித்த தீயை நாலாப்பக்கமும் எடுத்து வீசியது காற்று. அதனால் இன்றளவும் ஆடி மாதம் வந்தால், காற்று ஆவேசம் கொள்ளுகிறதோ? ஆடிக் காத்துல அம்மியும் அசையும் என்பார்கள்.

கண்ணகி இட்ட சாபத்தை நிறைவேற்ற வந்த தேவதை, தீயில் யாரெல்லாம் மாண்டு போக வேண்டும், யாரெல்லாம் தப்பிக்க வேண்டும்?’ என உத்தரவு கேட்டதாம். அப்போது அவள், ‘தீயவரை விடாதே!’ எனக் கண்டிப்பு காட்டிவிட்டு, நல்லோரை விட்டுவிடுமாறு வேண்டினாளாம். மதுரை எரியத் தொடங்கியதும் அங்கிருந்த நல்ல சக்திகள் வெளியேறத் தொடங்கின. நிலைமை மோசமாவதை அறிந்த மதுரையின் காவல் தெய்வமான மதுராபதி கையைப்பிசைந்தபடி வந்து கண்ணகி முன் தோன்றுகிறாள். கோவலன் கொலைப்பட்டதற்கான காரணம் அவனது முற்பிறவி வினையே எனக்கூறி, பாதி எரிந்த மதுரையில் மிச்சத்தைக் காப்பாற்றுகிறாள்.

இந்த நிகழ்வை நினைவுப்படுத்தும் விதமாகவே அம்மன் ஆலய திருவிழாக்களில் தீக் குழியைக் கடந்து செல்லுதல் (தீமிதித்தல்) ஒரு சடங்காக உருவானது என ஆய்வறிஞர்கள் கூறுகிறார்கள். இதெல்லாம் இன்றைய தலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கண்ணகி கோவில்!

Standard

கண்ணகித் தாய்க்கு சேரன் செங்குட்டுவன் விண்ணேந்திப் பாறையில் எழுப்பிய ஆலயத்தில் ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் திருவிழா காட்சிகள்!