Tag Archives: yanan

மூன்றாவது கண் நிகழ்ச்சியில் அடியேன்!

Standard

வேந்தர் டி.வி.யில் வரும் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் அடியேனின் கண்ணகி அம்மன் வழிபாடு குறித்த ஆவணப் பதிவு!

 

எழுத்தாளர் பாலகுமாரன் தரிசனம்!

Standard

balakumaran

த்துறையிலும் பேறுபெற்ற, சித்திபெற்ற மனிதர்களை நேரில் காணும் வாய்ப்பு எதிர்பாராமல் கிடைக்கப்பெற்றால் அதுவே தரிசனம் எனும் கருத்துடையவன். அவ்வகையில் எழுத்தாளர் பாலகுமாரனை,  அடியேன் சந்தித்தது ஒரு தரிசன நிகழ்வே! என் இளமைக்கால வாசிப்பின்போது, இவரது எழுத்து ஆளுமையில் சிக்கியிருக்கிறேன். இவரது படைப்புகளில், நான் முதன் முதலில் வாசித்தது இரும்புக்குதிரைகள் நாவல். அடுத்து மெர்க்குரிப்பூக்கள். அதன்பிறகு, மேலும் சில படைப்புகள் படித்திருந்தாலும், அதன் பெயர்கள் இப்போது நினைவில் இல்லை.  அவரது நேர்காணல்கள், அவரைப்பற்றிய துணுக்குகள்,விமர்சனங்கள் எதேனும் படிக்க நேர்ந்தாலும், ஒருநாள் இவரை நேரில் சந்திப்போம் என எண்ணியது இல்லை.

c.n.maheswaran with balakumaran

என் நலனை, தன் நலனாக கருதும் நண்பர் திரு. சி. என். மகேஷ்வரன் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு, எழுத்தாளர் பாலகுமாரன் நண்பர். இருவரும் நிறைய உரையாடிய அனுபவம் கொண்டவர்கள். அவ்வப்போது அவரது எழுத்தினால் ஏற்பட்ட தாக்கம் பற்றி என்னிடம் சிலாகித்து பேசியதுண்டு.
 .
இன்று எதிர்பாராத விதமாக எழுத்தாளரை, நண்பரோடு சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.  சில மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிப்புக்குள்ளாகி இருந்த எழுத்தாளரை நேரில் கண்டு நலம் விசாரிப்பதோடு, என்னையும் அறிமுகப்படுத்துவது, அவர் நோக்கமாக இருந்தது.
 .
மைலாப்பூரில் இருக்கும் அவர் இல்லத்துக்குச் சென்றோம். கதவு திறந்ததும் முதலில், திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமாரின் பெரிய படம் கொண்ட பூஜை அறையே கண்ணில் பட்டது. சில நொடிகளில், அவரது மகள் உதவியோடு வந்தமர்ந்தார்.

yanan with balakumaran

என்னை அறிமுகப்படுத்தினார் நண்பர். ’எனது நூலான ‘பாவ புண்ணியக் கணக்குகள் படித்துவிட்டேன்’ என்றார் பாலகுமாரன்.  நண்பரோடு சித்தாந்தம் பேசினார்.  நான் அமைதி காத்தேன்.  என்னையும் அந்த பேச்சில் ஈடுபட அழைத்தார். எனக்கு இருவரும் பேசுவதை கேட்கத்தான் பிடித்திருந்தது. இருப்பினும், அவர் ஒரு வினாவை முன்வைத்து உரையாட அழைத்தார். அப்படி அழைத்தது, இன்னும் பிடித்திருந்தது.
 .
”மகேஷ்வரன் நீங்க எனக்கு நண்பர்தான். ஆனாலும் ஒரு கலெக்டராக என் வீட்டிற்கு வந்தது, எனக்கு கெளரவம்”. என்று மகிழ்ந்து பேசினார்.  அவர் அருகில் அமர்ந்திருந்த என் கைகளை அவ்வப்போது பிடித்தபடி பேசியது அன்பாக உணர முடிந்தது.  விடைபெறும் போது அவரது மகள் அறையில் இருந்து நூல்கள் சிலவற்றை, எங்களுக்கு வழங்க எடுத்து வந்தார். அவற்றில் இல்லாத ’பாகசாலை’ எனும் நூலை எனக்கு வழங்குவதற்காக மகளிடம் எடுத்து வரச் சொன்னார். அதில் ‘இனிய யாணன்’ என எழுதி கையெப்பமிட்டார்.